பூஜையுடன் தொடங்கியது சிலம்பரசனின் அரசன் பட ஷூட்டிங்… வைரலாகும் வீடியோ
Arasan Movie Shooting : நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள அரசன் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கி உள்ளது.
நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் சிம்புவின் நடிப்பை மட்டும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சிம்புவின் நடிப்பில் உருவாக உள்ள படங்களின் அறிவிப்பு அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடந்து அவர் முதலாவதாக எந்த இயக்குநரின் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. அந்தப் படம் சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சிலம்பரசனை வைத்து படம் இயக்கும் பணிகளில் ஈடுபடத்துடங்கினார் இயக்குநர் வெற்றிமாறன். அதனைத் தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து படம் தொடர்பான தகவல்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




பூஜையுடன் தொடங்கியது அரசன் படத்தின் ஷூட்டிங்:
இந்த நிலையில் படம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் கோவில்பட்டியில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது குறித்து வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படம் வருகின்ற 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வடசென்னை பகுதியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக உள்ளதால் படத்தின் மீது ரசிகர்கலிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Also Read… பெங்களூரு நாட்கள் படத்தின் ஷூட்டிங்கில் ஆர்யா சொன்ன விசயம்… கலகலப்பாக பேசிய ராணா
இணையத்தில் வைரலாகும் பூஜை வீடியோ:
STR movie #arasan shooting in kovilpatti 💥💥💥
Movie oda first shooting ey enga area la tha mass la 😎 #simbu #vetrimaran
Enga street back side tha shoot 🥳🥳 pic.twitter.com/1p8UeJDk62— kutty_ilavarasi (@kutty_ilavarasi) December 9, 2025
Also Read… ரவி மோகன் நடிப்பில் வெளியான ப்ரதர் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ