பெங்களூரு நாட்கள் படத்தின் ஷூட்டிங்கில் ஆர்யா சொன்ன விசயம்… கலகலப்பாக பேசிய ராணா
Bangalore Naatkal Movie: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரகாக வலம் வருபவர் நடிகர் ராணா. இவர் அவ்வபோது மற்ற மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான காந்தா படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து இவர் அளித்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பெங்களூரு நாட்கள். இந்தப் படம் மலையாள சினிமாவில் வெளியான பேங்களூர் டேய்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இது மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் பெங்களூரு நாட்கள் படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் பாஸ்கர் இயக்கி இருந்தார். மேலும் பேங்களூர் நாட்கள் படத்தில் நடிகர்கள் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா, ராணா டகுபதி, பார்வதி திருவோத்து, ராய் லக்ஷ்மி, பாரிஸ் லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், சிஜாய் வர்கீஸ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, ஸ்ரீரஞ்சனி, பட்டிமன்றம் ராஜா, சஜித் யாஹியா, அர்ஜுன் ஜி. ஐயங்கார், அர்ஜாய், சமந்தா ரூத் பிரபு ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் பிரசாத் வி. பொட்லூரி தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடந்தது குறித்து நடிகர் ராணா பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து.




பெங்களூரு நாட்கள் படத்தின் ஷூட்டிங்கில் ஆர்யா சொன்ன விசயம்:
அதன்படி காந்தா படத்திற்காக நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் பெங்களூரு நாட்கள் படத்தின் ஷூட்டிங்கின் போது பேங்களூர் டேய்ஸ் படத்தின் வீடியோவைப் பார்த்துவிட்டு அவங்க மூனு பேரும் எவ்வள்வு இளமையா இருக்காங்க. நாம பாரு அங்கிள் மாதிரி இருக்கோம் என்று கூறியதாக ராணா கலகலப்பாக பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read… நான் மிகப்பெரிய கார்த்தி சார் ரசிகை… ஓபனாக பேசிய கீர்த்தி ஷெட்டி
இணையத்தில் கவனம் பெறும் ராணாவின் வீடியோ:
View this post on Instagram
Also Read… பூஜையுடன் தொடங்கியது சூர்யா 47 படம்… வைரலாகும் போட்டோ