50 நாட்களைக் கடந்த டியூட்… படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் வீடியோ
Dude Movie Team Celebrates 50 days: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டியூட். இந்தப் படம் இன்றுடன் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களைக் கடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் கோமாளி படத்தினை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் படத்தை இவர் இயக்கியது மட்டும் இன்றில் அதில் நாயகனாக அவரே நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இவர் நாயகனாக அறிமுகம் ஆன லவ் டுடே என்ற முதல் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் படங்களை இயக்குவதில் இருந்து விலகி தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்களும் தொடர்ந்து 100 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இறுதியாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்தப் படம் டியூட். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னதாக இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




50 நாட்களைக் கடந்த டியூட் படம்:
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழு படத்தில் இருந்து ஒரு காட்சி எடுக்கும் ஷூட்டிங் ஸ்பாட் பிடிஎஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தலைவர் 173 படத்திற்காக ரஜினிகாந்திற்கு கதை சொன்ன தனுஷ்? வைரலாகும் தகவல்
டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
50 days of #Dude ❤️🔥
Here’s the making behind your favorite thaali scene 😉#Dude now streaming on @NetflixIndia⭐ing ‘The Sensational’ @pradeeponelife
🎬 Written and directed by @Keerthiswaran_
Produced by @MythriOfficial
Music by @SaiAbhyankkar‘Supreme Star’… pic.twitter.com/pRv5XGdKPi
— Mythri Movie Makers (@MythriOfficial) December 6, 2025
Also Read… ஜாலி டூ மீட் யூ… காமெடி, ஆக்ஷன், ரொமாண்டிக் பாணியில் வெளியானது வா வாத்தியார் பட ட்ரெய்லர்