தலைவர் 173 படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லையா? இவதான் இசையமைக்கிறாரா
Thalaivar 173 Movie: தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் இருந்து தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் தான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தலைவர் 173 படத்தில் அவர் இசையமைக்கவில்லை என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பான் இந்திய அளவில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி தொடர்ந்து பான் இந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள ஜன நாயகன் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறர். முன்னதாக இந்தப் படத்தில் இருந்து வெளியான தளபதி கச்சேரி பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் மாதம் 27-ம் தேதி மலேசியாவில் நடைப்பெற உள்ளது. இதில் அனிருத்தின் பாடலை கேட்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர் அடுத்ததாக தலைவர் 173 படத்தில் இசையமைப்பார் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி பேட்ட படத்தில் இருந்து தொடர்ந்து ரஜினிகாந்தின் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தலைவர் 173 படத்தில் இவர் இசையமைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைவர் 173 படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லையா?
முன்னதாக தலைவர் 173 படத்தினை சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட பிறகு பின்பு அதிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து யார் அந்தப் படத்தை இயக்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது அந்தப் படத்தில் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கல் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… சூர்யா 46 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#SaiAbhyankkar is said to be in consideration for #Thalaivar173..😮💥 Gonna be a very young team for Superstar #Rajinikanth ..🌟 Let’s see how this one’s gonna be..🤝 pic.twitter.com/YjXNPBJyij
— Laxmi Kanth (@iammoviebuff007) December 4, 2025
Also Read… விறுவிறுப்பாக விற்பனையாகும் பராசக்தி படத்தின் வெளியீட்டு உரிமை – படக்குழு வெளியிட்ட அப்டேட்



