Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யாஷின் டாக்சிக் படத்துடன் மோதும் ரன்வீர் சிங்கின் துரந்தர் 2.. பாக்ஸ் ஆபிஸ் மோதல் உறுதி!

Dhurandar 2 vs Toxic: பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் படம்தான் டாக்சிக். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் நிலையில், இந்த படத்துடன் மோதுவதாக துரந்தர் படக்குழு உறுதியை தெரிவித்துள்ளது.

யாஷின் டாக்சிக் படத்துடன் மோதும் ரன்வீர் சிங்கின் துரந்தர் 2..  பாக்ஸ் ஆபிஸ் மோதல் உறுதி!
துரந்தர் 2 Vs டாக்ஸிக்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Dec 2025 19:49 PM IST

பாலிவுட் சினிமாவில் முன்னணி வேடங்களில் நடித்து பலகோடி ரசிகர்களின் நாயகனாக இருப்பவர் ரன்வீர் சிங் (Ranveer Singh). இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் துரந்தர் (Dhurandar). இப்படத்தை பிரபல இந்தி இயக்குநர் ஆதித்யா தார் (Aditya Dhar) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதல் பான் இந்திய மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங் அதிரடி ஆக்ஷ்ன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் கதாநாயகி சாரா அர்ஜுன் (Sara Arjun) நடித்திருந்தார். இவர் தமிழில் தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஒரு ஸ்பையாக நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த படத்தின் பாகம் 2 குறித்தும் படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த படத்தின் 2வது பாகம் துரந்தர் 2 வரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் வெளியாகும் என இப்படத்தன் முடிவில் படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த படம் நடிகர் யாஷின் (Yash) டாக்சிக் (Toxic) படத்துடன் மோதுவது உறுதியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதையும் படிங்க: கார்த்தியுடன் மோதும் அனுபமா பரமேசுவரன்… ‘லாக்டவுன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துரந்தர் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

கன்னட சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் யாஷ். இவரை ரசிகர்கள் யாஷ் தி பாஸ் என்றும் அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் டாக்சிக் என்ற படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா, ருக்மிணி வசந்த், டோவினோ தாமஸ் மற்றும் சுதேவ் நாயர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட ஷூட்ங்கில் இருந்துவருகிறது.

இதையும் படிங்க: தலைவர் 173 படத்திற்காக ரஜினிகாந்திற்கு கதை சொன்ன தனுஷ்? வைரலாகும் தகவல்

சுமார் ரூ 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை, ஜன நாயகன் படத்தை தயாரித்துவரும் கே.வி.என்.புரொடக்ஷன் நிறுவனமானது தயாரிக்கிறது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில், தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என கிட்டத்தட்ட 7 மொழிகளுக்கும் மேல் வெளியாகவுள்ளது. இந்த படத்துடன் ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 திரைப்படமானது நேரடியாக மோதுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.