Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lockdown : கார்த்தியுடன் மோதும் அனுபமா பரமேசுவரன்… ‘லாக்டவுன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Lockdown Movie New Release Date: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் அனுபமா பரமேசுவரன். இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவந்த திரைப்படம்தான் லாக்டவுன். இப்படம் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது புது ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.

Lockdown : கார்த்தியுடன் மோதும் அனுபமா பரமேசுவரன்… ‘லாக்டவுன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லாக்டவுன் திரைப்படத்தின் நியூ ரிலீஸ் தேதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Dec 2025 16:40 PM IST

மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் அனுபமா பரமேசுவரன் (Anupama Parameswaran). இவர் இறுதியாக கடந்த 2025 அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான பைசன் (Bison) படத்திலும் நடித்திருந்தார். இதில் நடிகர் துருவ் விக்ரமிற்கு (Dhruv Vikram) ஜோடியாக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது இவருக்கு தமிழில் மீண்டும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இந்த 2025ம் ஆண்டில் தமிழில் 3வது வெளியாக தயாராகிவந்த படம்தான் லாக்டவுன் (Lockdown). இப்படம் கடந்த 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகவிருந்த நிலையில், மழையின் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்திருந்தது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தற்போது புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இந்த லாக்டவுன் படமானது வரும் 2025ம் டிசம்பர் 12ம் தேதியில் உலகமெங்கும் வெளியக்கவுள்ளதாம். இந்த படம் ரிலீசாகும் அதே தேதியில்தான் நடிகர் கார்த்தியின் (Karthi) வா வாத்தியார் (Vaa Vaathiyaar) என்ற படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜாலி டூ மீட் யூ… காமெடி, ஆக்‌ஷன், ரொமாண்டிக் பாணியில் வெளியானது வா வாத்தியார் பட ட்ரெய்லர்

அனுபமா பரமேசுவரனின் லாக்டவுன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு பதிவு :

இந்த லாக்டவுன் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்க, லைகா ப்ரொடக்ஷன் நிறுவனமானது இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேசுவரனுடன் நடிகர்கள் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், லொள்ளுசபா மாறன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இப்படத்தின் டைட்டிலை போலவே இந்த படத்தின் கதையும் 2020ம் ஆண்டில் நடந்த கொரோனா லாக்டவுன் தொடர்பான கதைக்களத்தில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: இந்த சிறுமி யார் தெரியும்? மோட்டிவேஷனுக்கு ஒரு எடுத்துக்காட்டு… ஆனால் 2 வருடமாக படமில்லை… இந்த நடிகை யாருனு தெரியுதா?

இந்த படமானது முதலில் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகாவிருந்த நிலையில், பின் டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துளது. இந்நிலையில் இந்த படத்துக்கும் கார்த்தியின் வா வாத்தியார் படத்திற்கும் மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர்ந்து பல படங்கள் தோல்வியடைந்த நிலையில், இப்படம் வெற்றிபெறும் என படக்குழு முழு நம்பிக்கையை வைத்துள்ளனர்.