Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vaa Vaathiyaar: கார்த்தியின் வா வாத்தியார் படத்திற்கு வந்த சிக்கல்.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

Vaa Vaathiyaar Release Stay: கோலிவுட் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டில் கார்த்தியின் நடிப்பில் எதிர்பார்க்கப்பட்டுவந்த படம்தான் வா வாத்தியார். இந்த படத்தின் தயாரிப்பாளர் கடன் தொடர்பாக இப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்ட நிலையில், மேலும் கடனை செலுத்தாவிட்டால் படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

Vaa Vaathiyaar: கார்த்தியின் வா வாத்தியார் படத்திற்கு வந்த சிக்கல்.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
கார்த்தியின் வா வாத்தியார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Dec 2025 16:01 PM IST

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் 2025ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) இணைந்து நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக றிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy) இயக்க, க்ரீன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா (Gnanavel Raja) தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் இந்த வா வாத்தியார் படம் வரும் 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, திவால் தொழிலதிபர் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் (Arjun Lal Sundar Das) என்பவரிடம் கடனாக சில கோடிகளை பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த கடனை இவர் செலுத்தாத காரணத்தால் வா வாத்தியார் படத்தின் ரிலீஸை தடைசெய்ய கோரி சொத்தாட்சி வழக்கை (Property case) தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2025 டிசம்பர் 4ம் தேதியில் நடந்த இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) இப்படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்த நிலையில், தொழிலதிபர் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சுமார் ரூ 21.78 கோடிகளை வழங்கவேண்டும் என வா வாத்தியார் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது. இதன் 2வது விசாரணை இன்று (டிசம்பர் 10ம் தேதி) நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: நாகார்ஜுனா சார் ஏன் வயதாகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை – விஜய் சேதுபதி

வா வாத்தியார் படத்தின் ரிலீஸில் ஏற்படும் பிரச்சனை :

இந்நிலையில் இந்த வழக்கின் 2வது விசாரணை சமீபத்தில் நடந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வாங்கிய கடன்தொகையை திரும்ப செலுத்தவில்லை, இதன் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்தாவிட்டால், வா வாத்தியார் படத்தின் மீதான தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரத்தானதா நிவேதா பெத்துராஜினின் திருமணம்… என்ன நடந்தது?

இந்த படத்தின் இடைக்கால தடை இன்னும் நீட்டித்துவரும் நிலையில், படத்தின் ரிலீசிற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் இந்த செய்தியானது படம் ரிலீஸ் ஆகுமா? அல்லது ரிலீஸ் ஆகாதா? என ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. விரைவில் இந்த பிரச்சனையானது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

வா வாத்தியார் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றிருந்தது. மேலும் இப்படத்தின் டிக்கெட் புக்கிங்கும் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.