Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் வெளியிட்ட படக்குழு!

Sirai Movie Trailer Update: தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர் தற்போது முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் படம் சிறை. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் வெளியிட்ட படக்குழு!
சிறைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Dec 2025 18:23 PM IST

தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறை நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர் சிவாஜி கணேஷனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு நடிகராக வந்ததன் காரணமாகவே தொடர்ந்து பல விமர்சனங்களை எதிர்கொண்டார் நடிகர் விக்ரம் பிரபு. விமர்சனங்கள் பலவற்றை கடந்து தற்போது தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. 2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன இவர் தற்போது 13 ஆண்டுகளைக் கடந்து பல சிறப்பான படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றார். இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் லவ் மேரேஜ் மற்றும் தெலுங்கு சினிமாவில் காட்டி என இரண்டு படங்கள் வெளியானது.

இதில் லவ் மேரேஜ் படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஓடிடியில் வெளியான பிறகு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தெலுங்கு சினிமாவில் வெளியான காட்டி படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சிறை. இந்தப் படத்திற்கு டானாக்காரன் படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் திரைக்கதை எழுதியுள்ள நிலையில் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது வருகின்ற 12-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… நீலாம்பரியாக நடிக்க வைக்க முதலில் அந்த நடிகையிடமே பேசினோம் – நடிகர் ரஜினிகந்த் ஓபன் டாக்

சிறை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விறுவிறுப்பாக  நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ