Dhanush: 10 நாட்களில் தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Tere Ishq Mein 10th Day Collection: தனுஷின் நடிப்பில் கடந்த 2025 நவம்பர் மதத்தின் இறுதியில் வெளியான படம்தான் தேரே இஷ்க் மே. இந்த படமானது வெளியாகி இன்று 2025 டிசம்பர் 8ம் தேதியுடன் மொத்தம் 10 நாட்களை கடந்துள்ளது. இதுவரை உலகமெங்கும் எவ்வளவு வசூல் சேதித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 53 படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தனுஷின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்தி மொழியில் உருவான இப்படத்தை பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்க, கலர் எல்லோ என்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. இதில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு இணையாக நடிகை கிரித்தி ஷெட்டி (Kriti Sanon) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி இந்த படத்தின் மூலமாகத்தான் முதல் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரஹ்மானின் (AR. Rahman) இசையமைப்பில் இப்படம் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இன்று 2025 டிசம்பர் 8ம் தேதியுடன் இப்படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் உலகமெங்கும் மொத்தமாக இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்று 2025 டிசம்பர் 7ம் தேதியில் வார இறுதி என்ற நிலையில், இந்த படம் மொத்தமாக சுமார் ரூ 141.86 கோடிகளை வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ 150 கோடியை தொட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வெளியாகி பிரம்மாண்ட வசூல்செய்த படமாக தேரே இஷ்க் மே அமைந்துள்ளது.




இதையும் படிங்க: நான் ரொம்பவே சென்சிடிவ்.. என்னையே நான் இழந்துவிட்டேன்- கண்ணீருடன் பேசிய க்ரித்தி ஷெட்டி!
தேரே இஷ்க் மே படத்தின் 10வது நாள் வசூல் குறித்து படக்குழு வெளிடியிட்ட பதிவு :
Ishk Ignites The World!❤️🔥#TereIshkMein running successfully in cinemas near you, in Hindi, Tamil and Telugu.
Book your tickets now: https://t.co/bhQRYGBCFc@dhanushkraja @kritisanon @arrahman @aanandlrai #BhushanKumar #HimanshuSharma #KrishanKumar @Irshad_kamil… pic.twitter.com/eqvB7c54fm
— T-Series (@TSeries) December 8, 2025
டி54 படத்தில் பிசியாக இருக்கும் தனுஷ் :
தேரே இஷ்க் மே திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில், தனுஷ் தனது புதிய படத்தில் பிசியாக இருந்துவருகிறார். தேரே இஷ்க் மே படத்தை அடுத்தாக தமிழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி54 என்ற படத்தில் நடித்துவந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூலை மாதத்தில் தொடங்கிய நிலையில், பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பைசன் காளமாடன் படத்தை வெகுவாகப் பாராட்டிய பிரகாஷ் ராஜ் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
இந்த படத்தின் ஷூட்டிங்கை தனுஷ் முடித்ததாக கூறப்படும் நிலையில், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுவருகிறது. இதில் மலையாள நடிகர் சூராஜ் வெஞ்சாரமூடு முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இவரும் இப்படத்தின் ஷூட்டிங்கை முழுமையாக முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தய் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துவருகிறார். தனுஷுடன் மீண்டும் இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகவும் என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.