SK26 படம் லோடிங்.. இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
SK26 Movie Update: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தமிழில் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில் பராசக்தி படத்தை அடுத்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இவர் நடிக்கஉள்ள நிலையில், சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையோடு வெளியாகவுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi) . இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, சிவகார்த்திகேயன், ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Athrvaa) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) இணைந்து நடித்துள்ளனர். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. பராசக்தி படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது. மேலும் தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் சிறப்பாகவே நடைபெற தொடங்கிவிட்டது. இதன் காரணமாக படத்தின் ப்ரோமோஷன் மற்றும் இதர பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தை அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில் புது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரசிகர்கள் SK26 என அழைத்துவருகின்றனர்.
இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அது உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் சிவகார்த்திகேயன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: நான் ரொம்பவே சென்சிடிவ்.. என்னையே நான் இழந்துவிட்டேன்- கண்ணீருடன் பேசிய க்ரித்தி ஷெட்டி!
இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் :
#Sivakarthikeyan‘s Latest Click from Los Angles, USA..🌟 #SK26 Pre Production Works are happening at Lola VFX..🔥 A Sci-fi Entertainer loading from #VenkatPrabhu ..✌️ pic.twitter.com/cRRFXxZ3dw
— Laxmi Kanth (@iammoviebuff007) December 8, 2025
நடிகர் சிவகார்த்திகேயன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலாஸில் இருக்கும் படியான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. SK26 திரைப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் அங்கும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறதாம். சிவகார்த்திகேயனின் இந்த படமானது அறிவியல் புனைகதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகாவுள்ளதாம். இந்த படம் டைம் டிராவல் தொடர்பான கதையில் உருவாகவுள்ளதாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் டபுள் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு அனிருத் அல்லது சாய் அபயங்கர் இருவரில் ஒருவர் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் டி54 திரைப்படம்… சூரஜ் வெஞ்சாரமூடு வெளியிட்ட போஸ்ட் வைரல்!
இந்த படத்தின் ப்ரீ- புரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 டிசம்பர் இறுதியில் அல்லது 2026ம் ஆனது ஜனவரி தொடக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறும் என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தலைவன் தலைவி திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், இந்த SK26 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 2025 ஆண்டு கிறித்துமஸ் அல்லது 2026ம் ஆண்டு புத்தாண்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.