அமெரிக்கா செல்லும் சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு.. இதுதான் காரணமா?
Venkat Prabhu And Sivakarthikeyan Movie: தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் சிவகார்த்திகேயன். இவர் பராசக்தி படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபுவுடன் புது படத்தில் இணைகிறார். இந்த படத்தின் ஸ்பெஷல் விஷயத்திற்காக இருவரும் அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளியாகியுள்ளது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல உச்ச நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றிகண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் இறுதியாக இயக்கியிருந்த படம்தான் தி கோட் (The GOAT). தளபதி விஜய், சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரியின் கூட்டணியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இப்படத்தில் தொழில்நுட்பம் ரீதியாக பல விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், மக்களிடையே சிறப்பான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் பெற்ற படங்களில் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை அடுத்ததாக வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனை (Sivakarthikeyan) வைத்து புது படம் இயக்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் அமெரிக்கா செல்லவுள்ளார்களாம். என்ன காரணத்திற்காக செல்கிறார்கள் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.




இதையும் படிங்க: நடிகர் நானிக்கு கதை சொன்ன இயக்குநர் பிரேம் குமார்? வைரலாகும் தகவல்
அமெரிக்கா செல்லலும் சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு:
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தை அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் புது படத்தில் இணைகிறார். இந்த படம் தற்காலிகமாக SK26 என கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, சத்யஜோதி பிலிம் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படமானது ஒரு டைம் டிராவல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம்.
இதையும் படிங்க: ஆதிரை மற்றும் வினோத்திற்கு இடையே வெடித்த சண்டை.. விறுவிறுப்பான இன்றைய புரோமோ!
இதன் காரணமாக தி கோட் படத்தில் பயன்படுத்தப்பட்ட புது தொழில்நுட்பம் போல், சிவகார்த்திகேயனின் படத்தில் மேலும் சிறப்பான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாம். இதன் காரணமாக வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது.
பராசக்தி படம் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#Ratnamala from #Parasakthi is here 😊👍
Tamil – https://t.co/t0bus6rggo
Telugu – https://t.co/ZzvvOYBnPN#ParasakthiFromJan14 pic.twitter.com/wb7GzRCGO0— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 25, 2025
பராசக்தி படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள நிலையில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.