Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆதிரை மற்றும் வினோத்திற்கு இடையே வெடித்த சண்டை.. விறுவிறுப்பான இன்றைய புரோமோ!

Aadhirai And Gana Vinoth Fight: கடந்த 2025ம் அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது தற்போது 9வது வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் 59வது நாளான இன்று வெளியான முதல் புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆதிரை மற்றும் வினோத்திற்கு இடையே வெடித்த சண்டை.. விறுவிறுப்பான இன்றைய புரோமோ!
ஆதிரை மற்றும் கானா வினோத் சண்டை
Barath Murugan
Barath Murugan | Published: 03 Dec 2025 12:20 PM IST

தமிழில் மிகவும் பேமஸான நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது பான் இந்திய மொழிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியானது, தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 8 வாரங்கள் நிறைவடைந்த நிலையில், 9-வது வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தில் நோ ஏவிக்ஷன் என்ற காரணத்தினால் இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரும் வெளியேறவில்லை. அதற்கு பதிலாக 5-வது வைல்ட் கார்ட் எண்டரியாக, ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேரிய ஆதிரை (Aadhirai) மீண்டும் வந்துள்ளார். இதனால், தற்போது இந்த நிகழ்ச்சியானது மீண்டும் சுவாரஸ்யமாக நடைபெற தொடங்கியுள்ளது.

இந்நிலையில், 2025 டிசம்பர் 3ம் தேதியான இன்று வெளியான முதல் புரோமோவில் ஆதிரை மற்றும் கானா வினோத் (Gana Vinoth) இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 3 ஆண்டுகளை நிறைவு செய்த கட்டா குஸ்தி… 2-ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் 59வது நாளின் முதல் புரோமோ :

இந்த புரோமோவில் ஜாமீன் டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, சத்தமாக பேசிக்கொண்டிருக்கிறார் வினோத். உடனே ஆதிரை, “ஏய் கொஞ்சம் அமைதியாக இருங்க” என கத்திக் கூறிய நிலையில், உடனே பொங்கியெழுந்த கானா வினோத் மற்றும் ஆதிரைக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின்போது தொடர்ந்து பேசிய ஆதிரை, வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் வெளியே சென்றதற்கு வினோத் தான் முக்கிய காரணம் என திவ்யாவிடம் கூறுவதுபோன்று இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: என் ரசிகர்கள் என்னை வழிபாடு செய்வதை நான் விரும்பவில்லை – சிவகார்த்திகேயன்

இது இன்றைய எபிசோட் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 9 வீட்டிலிருந்து ஆதிரை ஏற்கனவே ஒரு பிரச்சனையின் காரணமாகத்தான் வெளியேற்றப்பட்டிருந்தார் என கூறப்பட்டிருந்த நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் நுழைந்து அதே பிரச்னையையே எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி பேசுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.