Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த விநாயகன்… வைரலாகும் வீடியோ

Actor Vinayakan about Jailer 2: ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடித்து கலக்கியவர் நடிகர் விநாயகன். முதல் பாகத்திலேயே இவர் உயிரிழந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தில் இவர் உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த விநாயகன்… வைரலாகும் வீடியோ
விநாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Dec 2025 20:48 PM IST

மலையாள சினிமாவில் பல வித்யாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நன்கு பிரபலம் ஆனவர் நடிகர் விநாயகன். இவர் படங்களில் நடித்து பிரபலம் ஆனது மட்டும் இன்றி பொது இடங்களில் போதையில் பிரச்னையில் ஈடுபட்டு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வைரலாவதையும் வழக்கமாகவே வைத்துள்ளார். இது தொடர்பான செய்திகளும் வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் நடிகர் விநாயகனின் நடிப்பு திறமை காரணமாக அவருக்கு படங்களின் வாய்ப்பு வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி உடன் இணைந்து கலம்காவல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விநாயகனிடம் நீங்க நடித்ததிலேயே உங்களுக்குப் பிடித்த காமெடி கதாப்பாத்திரம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஜெயிலர் படத்தில் வர்மா என்று தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த விநாயகன்:

மேலும், எல்லோரும் ஜெயிலர் 2 பத்தி என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆமாம், நானும் இந்தப் படத்தின் ஒரு பகுதிதான்.. அது ஒரு ஃப்ளாஷ்பேக் பகுதியா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் நீங்கள் என்னை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். ஜெயிலர்தான் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை வேடம். இயக்குனர் நெல்சன் இந்த முறை சிறப்பாக நடிப்பார் போல் தெரிகிறது. அவர் என்ன சமைத்திருக்கிறார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… என் ரசிகர்கள் என்னை வழிபாடு செய்வதை நான் விரும்பவில்லை – சிவகார்த்திகேயன்

இணையத்தில் வைரலாகு விநாயகனின் வீடியோ:

Also Read… நடிகர் நானிக்கு கதை சொன்ன இயக்குநர் பிரேம் குமார்? வைரலாகும் தகவல்