Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜமீன்தார் வீடாக மாறிய பிக்பாஸ் இல்லம்… இந்த வார டாஸ்க் இதுதான் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 8 வாரங்கள் முடிவடைந்து தற்போது 9-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் என்ன என்பது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஜமீன்தார் வீடாக மாறிய பிக்பாஸ் இல்லம்… இந்த வார டாஸ்க் இதுதான் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Dec 2025 11:08 AM IST

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் தற்போது 9-வது சீசனும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் மொத்தம் வைல்கார்ட் போட்டியாளர்களுடன் 24 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் திட்டிக்கொண்டே இதனை ரசிகர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். இப்படியான சூழலில் நிகழ்ச்சியின் போக்கை மாற்ற பிக்பாஸ் குழு பல முயற்சிகளை எடுத்தது. அது சில நேரங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குறைந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்த வாரத்திற்கான வீட்டு தல டாஸ்கில் ரம்யா ஜோ வெற்றி பெற்ற காரணத்தால் அவர் இந்த 9-வது வாரத்திற்கன வீட்டு தலையாக தேர்வாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற நாமினேஷன் ப்ராசசில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் வினோத், விக்ரம், திவ்யா, பார்வதி, சாண்ட்ரா, கம்ருதின், பிரஜன், கனி, அமித், எஃப்ஜே மற்றும் சுபிக்‌ஷா என 11 போட்டியாளர்கள் நாமினேட் ஆகியுள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.

ஜமீன்தார் வீடாக மாறிய பிக்பாஸ் இல்லம்:

இந்த நிலையில் இந்த 9-வது வாரத்திற்கான டாஸ்கை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஜமீன்தார் இல்லமாக மாறியுள்ளது. வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து அவர்களுக்கான நகைகளை யாரும் திருடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப் பத்திரமாக பாதுகாப்பவர்களுக்கே சரியான சன்மானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… சூர்யா 46 அந்த ஹிட் படம் மாதிரி இருக்கும் – ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

பிக்பாஸ் நிகழ்ச்சிகுழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மோகன் ஜி படம்னு தெரிஞ்சு இருந்தா பாடல் பாடி இருக்க மாட்டேன் – சின்மயி விளக்கம்