தல ஃபேன்ஸ்க்கு ஒரு ஹேப்பி நியூஸ்… இணையத்தில் வைரலாகும் ஏகே 64 படத்தின் ஷூட்டிங் அப்டேட்?
Ajith Kumars AK 64 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் ஏகே 64. இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவர் தமிழ் சினிமாவில் சுமார் 33 ஆண்டுகளாக நடித்து வரும் நிலையில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். நடிகர் அஜித் குமார் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பான் இந்திய அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் சினிமாவில் எந்தவித பின்புலனும் இல்லாமல் சுயமாக தனது உழைப்பால் தற்போது இந்த இடத்தில் உள்ளார் நடிகர் அஜித். இது அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளோடு வரும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கடின உழைப்பிற்காகவே அஜித் குமாருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடந்து சினிமாவில் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் அஜித் குமார் தனது கார் ரேஸிங்கிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பல நாடுகளில் நடைபெறும் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்று விருதுகளை குவித்து வருகிறார் அஜித் குமார். தொடர்ந்து ரேஸிங் மற்றும் நடிப்பி இரண்டிலும் பிசியாக இருக்கும் அஜித் குமார் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




மே மாதம் தொடங்குகிறது ஏகே 64 படத்தின் ஷூட்டிங்?
நடிகர் அஜித் குமாரின் 64-வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இவர் முன்னதாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற குட் பேட் அக்லி படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் வருகின்ற மே மாதம் தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#AK64 is ON ✅ shooting to commence from May 2026. #AjithKumar will be balancing both his racing commitments 🏎️🏁 and cinema 🎬 throughout the year 💥 a #AdhikRavichandran pakka commercial #AK movie loading with a pulsating #Anirudh musical 🎶. pic.twitter.com/RBzyeF5yDz
— Movies Singapore (@MoviesSingapore) March 15, 2026
Also Read… Vijay Sethupathi: துரந்தர் படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது – விஜய் சேதுபதி பேச்சு!