கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு – பிரபலங்கள் வாழ்த்து
கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவிற்கு இலக்கியத்தில் அவரது பங்களிப்பை போற்றும் விதமாக அவருக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கவிதை, நாவல் என 37 புத்தங்களை அவர் எழுதியிருக்கிறார். அவரது இலக்கியங்கள் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ரஷ்யன் ஆகிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவரது கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளார்.
கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவிற்கு இலக்கியத்தில் அவரது பங்களிப்பை போற்றும் விதமாக அவருக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரபல திரைப்பட பாடலாசிரியரான வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் கவிதை, நாவல் என 37 புத்தங்களை அவர் எழுதியிருக்கிறார். அவரது இலக்கியங்கள் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ரஷ்யன் ஆகிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவரது கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வென்றுள்ளார்.
இலக்கியத்துக்கான உயரிய விருதை பெறும் வைரமுத்து
டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் நிறுவப்பட்ட பாரதிய ஞான பீட அறக்கட்டளை சார்பில், தங்களது வாழ்நாள் முழுவதும் இலக்கித்துக்காக அர்ப்பணித்தவர்களுக்கு கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் இந்த ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை கடந்த 1975 ஆம் ஆண்டு அகிலனுக்கும் கடந்த 20022 ஆம் ஆண்டு ஜெயகாந்தனுக்கும் ஞானபீடபூமி விருது வழங்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து 3வது நபருக்கு இந்த ஞானபீட விருது வழஹங்கப்படுகிறது.




இதையும் படிக்க : சிலிண்டர் பதுக்கி வைத்து விற்பனை? திருப்பூரில் தனியார் கேஸ் நிறுவனத்துக்கு “சீல்”
கமல்ஹாசன் வாழ்த்து
நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது.
ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு @Vairamuthu
‘வானம்…— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2026
இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கம் மூலம் வைரமுத்துவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து ‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : சிலிண்டர் தட்டுப்பாடு.. ஹோட்டல், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்.. அரசு அதிரடி அறிவிப்பு!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துப்பதிவில், தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது. காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.