AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பவன் கல்யாணின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான உஸ்தாத் பகத் சிங் பட ட்ரெய்லர் – கொண்டாடும் ரசிகர்கள்

Ustaad Bhagat Singh Trailer | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பவன் கல்யாணின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான உஸ்தாத் பகத் சிங் பட ட்ரெய்லர் – கொண்டாடும் ரசிகர்கள்
உஸ்தாத் பகத் சிங்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Mar 2026 14:45 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தொடர்ந்து அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். அரசியல் நடிப்பு என இரண்டிலும் பிசியாக வலம் வரும் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான படம் தே கால் ஹிம் ஓஜி. இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாணின் மாஸான நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் அந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தே கால் ஹிம் ஓஜி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் உஸ்தாத் பகத் சிங். ஆக்‌ஷன் காமெடி மற்றும் ரொமாண்டிக் என எல்லாம் கலந்த கலவையாக உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் எழுதி இயக்கி உள்ளார். படம் வருகின்ற 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான உஸ்தாத் பகத் சிங் படத்தின் ட்ரெய்லர்:

மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த உஸ்தாத் பகத் சிங் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது ஒரு பக்கா எண்டெர்டெய்ன்மெண்ட் படமாக இருக்கும் என்பது தெறிகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாண் ஒரு அதிரடி ஆக்‌ஷன் போலீசாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு – பிரபலங்கள் வாழ்த்து

உஸ்தாத் பகத் சிங் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜெயிலர் 2 படத்தில் நடிக்க என் சுயநலம் தான் காரணம் – விஜய் சேதுபதி ஓபன் டாக்

Follow Us