AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Silambarasan: கருப்பு படத்திற்கு பாடல் பாடிய சிலம்பரசன்? – சாய் அபயங்கர் வெளியிட்ட பதிவு வைரல்!

Sai Abhyankkar And Silambarasan: தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் இசையமைப்பாளராக இருந்துவருபவர் சாய் அபயங்கர். இவர் நடிகர் சிலம்பரசனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் இவர் கருப்பு படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

Silambarasan: கருப்பு படத்திற்கு பாடல் பாடிய சிலம்பரசன்? – சாய் அபயங்கர் வெளியிட்ட பதிவு வைரல்!
சாய் அபயங்கர் மற்றும் சிலம்பரசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Mar 2026 16:41 PM IST

இளம் இசையமைப்பாளராக தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவரின் இசையமைப்பில் தமிழில் முதல் படமாக வெளியாகியிருந்தது டியூட் (Dude). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மொத்தம் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது என அனைவருக்குமே தெரியும். அந்த விதத்தில் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த நடிகர்களுடன் புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். நடிகர் சூர்யா (Suriya) முதல் தனுஷ் (Dhanush) போன்ற நடிகர்களுடன் புதிய திரைப்படங்களில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக இவர் பல ஹிட் படங்ககளை கொடுக்கும் நிலையில் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களிலுமே இசையமைக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் இவர் சூர்யாவின் கருப்பு (Kruppu) படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இப்படமானது விரைவில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகர் சிலம்பரசனுடன் (Silambarasan) இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் தகவல் ஒன்று வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வெக்கேஷனுக்கு குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோஸ்!

சிலம்பரசனுடன் இருக்கும்படியான பதிவை வெளியிட்ட இசையமைப்பாளர் சாய் அபயங்கர்:

 

View this post on Instagram

 

A post shared by Sai Abhyankkar (@abhyankkar)

சாய் அபயங்கர் இசையமைப்பில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம்தான் கருப்பு. இதில் சூர்யா நாயகனாக நடித்திருக்கும் நிலையில், திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளார். சாய் அபயங்கரின் இசையமைப்பில் ஏற்கனவே “God Mode” என்ற பாடல் வெளியான நிலையில், இதையடுத்து இதன் 2வது பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த விதத்தில் கருப்பு படத்தின் 2வது பாடலை சிலம்பரசன் பாடியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க: சில பயணங்களுக்குக் கால தாமதமாகும்… ஆனால் சேருமிடம் எப்போதும் சிறப்பானதாக இருக்கும் – ஒன்ஸ்மோர் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

சாய் அபயங்கர் மற்றும் சிலம்பரசன் கூட்டணி:

நடிகர் சிலம்பரசன் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணி படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில காரணங்களால இப்படம் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலம்பரசன் மற்றும் சாய் அபயங்கர் கூட்டணி மீண்டும் STR51 படத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சாய் அபயங்கர் வெளியிட்ட பதிவு அதற்காக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us