Sai Abhyankkar: நமது கலாச்சாரத்தை பேசும்.. கருப்பு படம் ஏப்ரல் ரிலீஸ் – சாய் அபயங்கர் உறுதி!
Sai Abhyankkar confirms Karuppu Movie Release: தமிழில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் சாய் அபயங்கர். இவர் சமீபத்தில் விருதுவழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த விழாவின் போது பேசிய இவர், கருப்பு திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்யப்படுவதாக உறுதி செய்துள்ளார்.
நடிகர் சூர்யா (Suriya) மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ. Balaji) கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்ட் கருப்பு (Karuppu). இதில் சூர்யா ரெட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் சூர்யா – திரிஷா ஜோடியானது இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்ஷன், தெய்வீகம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை உள்ளடக்கிய கதைக்களமாக கருப்பு படமானது தயாராகியுள்ளது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இதுதானா இவர் இசையமைக்கும் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் படமாகும். இதிலிருந்து ஏற்கனவே “God Mode” என்ற பாடலானது வெளியாகியுள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்களும் தயாராகியுள்ளது.
இறுதிக்கட்ட பணிகளில் இப்படம் இருக்கும் நிலையில், ரிலீஸ் எப்போது இருக்கும் என எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியிருந்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர், கருப்பு படமானது 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என உறுதி செய்துள்ளார்.




இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜிக்கும், கருப்பு பட தயாரிப்பாளருக்கும் பிரச்சனையா? சுருக்கமாக பதில் கொடுத்த தயாரிப்பாளர்!
கருப்பு படம் குறித்து ரசிகர்களுக்கான அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர் :
அந்த நிகழ்ச்சியின்போது , சாய் அபயங்கரிடம் கருப்பு படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அப்போது மேடையில் அவர், “கருப்பு படமானது 2026 ஏப்ரலில் ரிலீஸிற்காக காத்திருக்கிறது. தற்போது அந்த படத்தின் ரீ ரெக்கார்டிங் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. பல விஷயத்தை ரெக்கார்டிங் பண்ணிருக்கோம், கருப்பசாமி மற்றும் நமது கலாச்சாரத்தை பேசும் விதத்தில் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் இருக்கும் என நான் நம்புகிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளர்.
இதையும் படிங்க: தெறிக்கும் வெற்றி… திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது தலைவர் தம்பி தலைமையில் படம்
கருப்பு படம் குறித்து சாய் அபயங்கர் பேசிய வீடியோ பதிவு:
#SaiAbhyankkar Recent Update
— The RR work of the film #Karuppu starring #SURIYA SIR is verithanama poitu Iruku.
— Karuppasamy & will be a film that talks about culture.
— This film will definitely be released in April.
pic.twitter.com/9eDUCrsqMo— Movie Tamil (@_MovieTamil) March 5, 2026
சின்னத்திரையில் வாய்ப்புகள் வந்தால் சந்தோஷமாக செல்வேன்- ரச்சிதா மகாலட்சுமி பேச்சு!
இந்த கருப்பு படமானது வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் வெளியாகு என கூறப்படும் நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.