விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் வெற்றிமாறன்
Nooru Saami Movie First Look Poster Out Today: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அடுத்ததாக நாயகனாக நடிக்க உள்ள படம் நூறு சாமி. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட உள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும் வலம் வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பல சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பேச்சு வழக்கில் இல்லாத பல வார்த்தைகளை பாடல்களில் பயன்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவதிலும் விஜய் ஆண்டனி கில்லாடி என்றே சொல்லாம். தொடர்ந்து தனது பாடல்களில் தன்னையே கிண்டலடித்துக்கொள்வது என பல விசயங்களை செய்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து இசையமைப்பாளராக முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி பிறகு படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இசையமைப்பாளராக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் ஆண்டனி நாயகனாகவும் வரவேற்பைப் பெற தவறவில்லை.
அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் நூறு சாமி. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளது.




நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் வெற்றிமாறன்:
விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இந்த நூறு சாமி படத்தினை இயக்குநர் சசி எழுதி இயக்க உள்ளார். பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து இவர்களின் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது. இந்த நூறு சாமி படத்தினை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் சார்பாக தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று 16-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு மாலை 6 மணிக்கு இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சேயோன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் துல்கர் சல்மான் பட நடிகை?
நூறு சாமி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Our Arasan #Vetrimaaran is all set to unveil the First Look of #Noorusaami tomorrow at 6pm!#NoorusaamiFromMay1@vijayantony #Sasi @vijayantonyfilm #Swasika @AJDhishan990 @karunaasethu @jose_lijomol #BalajiSakthivel @Sakthi_Raj7 @kavyaanil_ @padinekumar_ofl @DarshanKirlosh pic.twitter.com/w9ZdHtjFm9
— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) March 15, 2026
Also Read… Sai Abhyankkar: அதற்காக மட்டுமே நான் பாடல்களை உருவாக்க நினைக்கவில்லை – சாய் அபயங்கர்!