Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Anirudh: விஜய் சாரின் கடைசி ஆடியோ லான்ச்.. நிச்சயமாக தெறிக்க விடுறோம் – அனிருத் பேச்சு!

Anirudh About Jana Nayagan Audio Launch: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் அனிருத் ரவிசந்தர். இவர் தளபதி விஜயின் ஜன நாயகன் படத்திற்கும் இசையமைத்துவருகிறார்.. சமீபத்தில் செய்தியார்கள் சந்திப்பில் பேசிய இவர், ஜன நாயகன் பட ஆடியோ லான்ச் குறித்து தெரிவித்துள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Anirudh: விஜய் சாரின் கடைசி ஆடியோ லான்ச்.. நிச்சயமாக தெறிக்க விடுறோம் – அனிருத் பேச்சு!
அனிருத் மற்றும் விஜய் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Dec 2025 20:36 PM IST

தமிழ் சினிமாவில் தனுஷின் 3 படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தற்போது தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பிரபலங்களின் படத்திற்கு இசையமைத்துவருகிறார். மேலும் இவர் தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கன்னட நடிகர் யாஷின் டாக்சிக் படத்திற்கும் பாடல்கள் மட்டும் இவர் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக கன்னட சினிமாவிலும் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அனிருத்தின் இசையமைப்பில் தமிழில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்த இப்படத்திற்கு அனிருத் தன இசையமைத்துவருகிறார்.

இந்நிலையில் இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் சமீபத்தில் செய்தியாளர்களை அனிருத் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் பேசிய அனிருத், ஜன நாயகன் படத்தின் ஆடியோ லான்ச் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். மேலும் தளபதி விஜயின் கடைசி படத்திற்கு இசையமைப்பது குறித்து தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் வெளியிட்ட படக்குழு!

ஜன நாயகன் படம் குறித்து பேசிய அனிருத் ரவிச்சந்தர் :

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அனிருத், அதில் “தற்போது ஜன நாயகன் படத்தின் ஆர்.ஆர். வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. 2026 ஜனவரியில் படம் வெளியாவதில் மகிழ்ச்சி. என்ன கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. விஜய் சாரின் கடைசி படம் என்பதால், அதனால் மேலும் கடினமாக இந்த படத்திற்கு பணியாற்றிவருகிறோம். மேலும் ஜன நாயகன் படத்தில் ஆடியோ லான்ச் மிகவும் பயங்கரமாக நடைபெறவுள்ளது. ஓபன் கலையரங்கம், மேலும் நானும், விஜய் சாரின் காமினேஷனில் வெளியான எங்கள் படத்தின் பாடல்களை இணைத்து அவருக்கு ஒரு ட்ரிபியூட் மாதிரி பண்ணபோகிறேன்.

இதையும் படிங்க: ரெட்ரோ பட வில்லன் கதாநாயகனாக அறிமுகமாகும் புது படம்.. டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

மேலும் மலேசியாவில் எனது மியூசிக் கான்சட் என்றாலே தெறிக்கும், மேலும் ஜன நாயகன் படத்தின் ஆடியோ லான்ச் பெரிய கலையரங்கத்தில் நடக்கிறது. நிச்சயமாக எனது சிறப்பை அதில் நான் கொடுப்பேன். நிச்சயம் தெறிக்கவிடுறோம். மேலும் இந்த ஆடியோ லான்ச் ஒரு புதிய நினைவாக இருக்கும், விஜய் சாருக்கு ஒரு ட்ரிபியூட்டாக இருக்கும். மேலும் ஜன நயகன் படத்தின் பாடல்கள் மட்டும் இல்லாமல், விஜய் சார் மற்றும் எனது காமினேஷனில் வெளியான கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட் போன்ற படங்களின் பாடல்களை எல்லாம் சேர்த்து பட்டாசாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஆடியோ லான்ச் வரும் 2025 டிசம்பர் 27ம் தேதியில், மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.