Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jailer 2: ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்.. ஜெயிலர் 2 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்!

Rajinikanths 75th Birthday: தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடத்தை கடந்துள்ளார். அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 12ம் தேதியில் தனது 75வது வயதை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் பிறந்தநாளை கொண்டாடியது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Jailer 2: ஹேப்பி பர்த்டே சூப்பர் ஸ்டார்.. ஜெயிலர் 2 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்!
ஜெயிலர் 2 படக்குழுவுடன் ரஜினிகாந்த் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Dec 2025 11:36 AM IST

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகர் என்றே கூறலாம். சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடமாக கதாநாயகனாகவே நடித்துவருகிறார். இயக்குநர் கே.பாலசந்தரால் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த 2025ம் ஆண்டுடன் கிட்டத்தட்ட 50 வருடத்தை நிறைவு செய்துள்ளார். இதை சிறப்பிக்கும் விதத்தில் சர்வதேச திரைப்பட விருது (IFFI 2025) வழங்கும் விழாவில், இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான் விருது கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான கூலி (Coolie). இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படமானது கடந்த 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு, நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) ஜெயிலர் 2 (Jailer 2) பட ஷூட்டிங்கில் இணைந்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் நிறைவடைய உள்ளது.

அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 12ம் தேதியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கொண்டாடியுள்ளார். ஜெயிலர் 2 படக்குழுவினருட, கேக் வெட்டி சிறப்பாக தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: துப்பாக்கிய புடிங்க பாண்டி.. மாறுபட்ட கதைக்களத்தில் வெளியானது கொம்புசீவி பட ட்ரெய்லர்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடிய ஜெயிலர் 2 படக்குழு :

இந்த ஜெயிலர் 2 படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சி கதைக்களத்துடன் தயாராகிவருகிறது. இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் 2025 மார்ச் மாதம் முதல் தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகளில் இருந்துவருகிறது.

இதையும் படிங்க: அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் அனைத்தும் சிறப்பாக தயாராகியுள்ளதாக அவரே ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025 டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இது குறித்தான அறிவிப்பு ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.