அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு
Actor Arjun Das and Actress Anna Ben: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் அடுத்ததாக நாயகனாக நடிக்க உள்ள படத்தில் பிரபல மலையாள நடிகை ஜோடியாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது இந்த கலாச்சாராம் மெல்ல மெல்ல மாறி வருகிறது. முன்பு எல்லாம் தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தால் அவர்கள் தொடர்ந்து வில்லனாக மட்டுமே நடிப்பார்கள். நாயகனாக நடிப்பவர்கள் தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருவார்கள். இப்படி இருக்கும் சூழலில் இந்த சூழல் தற்போது வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகின்ற நடிகர்கள் தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரத்தில் மட்டும் நடிக்காமல் நாயகன்களாகவும் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக சக்கைபோடு போட்டு வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் நாயகன் என மாறி மாறி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் பாம். சோசியல் ட்ரமா ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் தொடர்ந்து படங்களில் வில்லனாகவும் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் நாயகனாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.




அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை:
அதன்படி அர்ஜுன் தாஸ் மற்றும் பிரபல மலையாள நடிகை அன்னா பென் ஜோடி சேரும் புதியப் படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. அன்னா பென் முன்னதாக சூரி உடன் இணைந்து கொட்டுகாளி படத்தில் நடித்து ரசிகர்களின் கவணத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நாயகியாக நடிகை அன்னா பென் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
An auspicious start!
Inaugural venture #ProductionNo1 pooja, associated with @Maaliandmaanvi & @kloutstudios
Starring @iam_arjundas @benanna_love @iYogiBabu #Vadivukarasi
Written & Directed by @harish_durairaj
Music by @RSeanRoldan @arunprajeethm @vijaymp29 @proyuvraaj pic.twitter.com/iQuHOWZdfi— Power House Pictures (@powerhousepic) December 10, 2025
Also Read… Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!