Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!

Padayappa Re-release Trailer: தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் 50வது வருடத்தை கடந்த நிலையில், அதன் சிறப்பாக கொண்டாடும் வகையில் படையப்பா படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதன் ட்ரெய்லரை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
படையப்பா பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்
Barath Murugan
Barath Murugan | Published: 10 Dec 2025 20:39 PM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 1999ம் ஆண்டு வெளியாகி மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம் படையப்பா (Padayappa). இப்படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்(K.S.Ravikumar) இயக்கியிருந்தார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) அதிரடி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை சௌந்தர்யா (Soundarya) நடித்திருந்தார். இந்த படம் 1999ம் ஆண்டில் ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடித்திருந்தார். இவர் நடித்தது போல இன்று வரையில் எந்த பெண் லீட் வில்லன் கதாபாத்திரமும் பெரிதாக அமைந்ததில்லை என்றே கூறலாம். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR.Rahman)இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகவே அமைந்திருந்தது.

இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடத்தை கடந்த நிலையில், வரும் 2025 டிசம்பர் 12ம் தேதியில் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று 2025 டிசம்பர் 10ம் தேதியில் இந்த படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெய்லரை, ரஜினியின் மகளும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth)பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவில் விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… என்ன தெரியுமா?

சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த படையப்பா படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் பதிவு :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடத்தை கடந்துள்ளார், கடந்த 1975ம் ஆண்டில் இயக்குநர் கே. பாலசந்தரால் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த 2025ம் ஆண்டுடன் சினிமாவில் 50 வருடத்தை நிறைவு செய்துள்ளார். இதன் ஸ்பெஷலாக இந்த் 2025ம் ஆண்டில் கூலி படமானது வெளியாகியிருந்தது. ஆனால் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை. மேலும் ரஜினிகாந்த்தை கௌரவிக்கும் விதத்தில் சமீபத்தில் நடந்த 2025ம் ஆண்டு சர்வதேச திரைப்பட விருது விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் வெளியிட்ட படக்குழு!

மேலும் ரஜினிகாந்தின் 50வது வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதத்தில், அவரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் ஏற்கனவே அறிவித்த நிலையில், ரஜினியின் பிறந்தநாளில் இப்படம் வெளியாகவும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 10ம் தேதியில் புதுவிதமாக எடிட் செய்யப்பட்ட படையப்பா படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர் பதிவை இவர் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டுவருகிறது.