Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேரளாவில் விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… என்ன தெரியுமா?

Jana Nayagan FDFS Update: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி குறித்து அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கேரளாவில் விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… என்ன தெரியுமா?
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Dec 2025 19:51 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெனிந்திய சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஜன நாயகன். அதன்படி நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகும் படம் இது என்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. பொதுவாக தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாள சினிமவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழ் மக்களிடையே மட்டும் இன்றி மலையாள சினிமாவில் உள்ள ரசிகர்கலிடையேயும் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் தங்களுக்கு விஜய் ஒரு ரோல் மாடல் என்று பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியகாவுள்ள படம் ஜன நாயகன். தனது சினிமா கெரியரை விட்டுவிட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதன் காரணமாக இந்த ஜன நாயகன் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கேரளாவில் விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்:

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நாகார்ஜுனா சார் ஏன் வயதாகாமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை – விஜய் சேதுபதி

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Vaa Vaathiyaar: கார்த்தியின் வா வாத்தியார் படத்திற்கு வந்த சிக்கல்.. அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!