Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸில் மீண்டும் மோதிக்கொள்ளும் ஆதிரை மற்றும் கானா வினோத் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 10-வது வாரத்திற்கான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் சண்டை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டால் டாஸ்க் இல்லாமலே பிக்பாஸ் வீட்டில் சண்டை தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் மீண்டும் மோதிக்கொள்ளும் ஆதிரை மற்றும் கானா வினோத் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Dec 2025 17:13 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தற்போது 10வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு தொடர்ந்து டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. டாஸ்கில் சண்டை வரும் என்று எதிர்பார்த்தால் நாள் முழுவதுமே இந்த சீனலில் உள்ள போட்டியாளர்களுக்கு சண்டை போடுவது மட்டுமே தொழிலாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த 10-வது வாரத்திற்கான டாஸ்காக வழக்காடு நீதிமன்றம் என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் கடந்த 8 சீசன்களாக நடைப்பெற்ற போது போட்டியாளர்கள் தங்களது மனதில் இருக்கும் வன்மத்தை கொட்டித் தீர்க்க உதவியது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் டாஸ்க் இல்லாமலே வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள் டாஸ்கில் தற்போது வன்மத்தை கொட்ட உள்ளனர்.

இந்த நிலையில் இந்த டாஸ்கில் சண்டை ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்தப் டாஸ்கில் சண்டை டாஸ்க் இல்லாமலும் நடைபெறுகின்றது. அதன்படி இந்த பிக்பாஸில் 3-வது வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ஆதிரை. இவர் எவிக்டாக வேண்டிய போட்டியாளர் இல்லை என்று கூறி பல கருத்துகள் நிழவி வந்த நிலையில் தற்போது 9-வது வாரம் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்தார் ஆதிரை.

பிக்பாஸில் மீண்டும் மோதிக்கொள்ளும் ஆதிரை மற்றும் கானா வினோத்:

இவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து சண்டையையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவ்வபோது உரசிக்கொண்டு இருந்த ஆதிரை மற்றும் கானா வினோத் இருவரும் இன்று நேரடியாக பிக்பாஸ் வீட்டில் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… லோகேஷ் கனகராஜ் உடனான கூட்டணி குறித்து பேசிய அமீர் கான்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு மற்றும் ஜனநாயகன் படங்களின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்