ரத்னகுமார் இயக்கத்தில் புதிதாக உருவாக உள்ள படம்… வெளியானது அப்டேட்
Director Rathnakumar New Movie: தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது ரத்னகுமார் இயக்க உள்ள புதுப் படம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குநர், எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக வலம் வருபவர் ரத்னகுமார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடிக்க நடிகை பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் விவேக் பிரசன்னா, இந்துஜா ரவிச்சந்திரன், அருண் பிரசாத், அம்ருதா சீனிவாசன், மேத்யூ வர்கீஸ், சுஜாதா பஞ்சு, அந்தோணி தாசன், பிரதீப் கே.விஜயன், கோபி ஜிபிஆர், சரண்யா ரவிச்சந்திரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குலு குலு படத்தில் நடிகர் சந்தானத்தின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் இணை ஆசிரியராகவும் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.




ரத்னகுமார் இயக்கத்தில் புதிதாக உருவாக உள்ள படம்:
இந்த நிலையில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் புதிதக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தை ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜி ஸ்கொயர் சார்பாக தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பிரதீப் பூபதி ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லும் மற்றும் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… ரவி மோகன் நடிப்பில் வெளியான ப்ரதர் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Stand at Ease please 🙂
My next film’s First look & Title Reveals with a video at 1:29* PM Tomorrow.
A @RSeanRoldan musical ♥️
Produced by my Homies @kaarthekeyens @Dir_Lokesh @karthiksubbaraj @PradeepBoopath2@stonebenchers @GSquadOffl pic.twitter.com/rkxAE9Xh5X
— Rathna kumar (@MrRathna) December 9, 2025
Also Read… பெங்களூரு நாட்கள் படத்தின் ஷூட்டிங்கில் ஆர்யா சொன்ன விசயம்… கலகலப்பாக பேசிய ராணா