Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!

Karthi About Vaa Vaathiyaar Script: கார்த்தியின் நடிப்பில் 26வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் வா வாத்தியார். இப்படத்தில் கார்த்தி அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் நகைச்சுவை என கலக்கல் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், இந்த படத்தின் கதை கேட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
கார்த்தி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Dec 2025 20:44 PM IST

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy). விஜய் சேதுபதியின் சூது கவ்வும் (Soodhu Kavvum) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவர் மற்றும் நடிகர் கார்த்தியின் (Karthi) கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்க, க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 12ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பையே பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கார்த்தி, வா வாத்தியார் படத்தின் கதையை முதலில் கேட்ட பயங்கரமான அனுபவம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர், இப்படத்தின் கதையை முதலில் கேட்டபோது பயந்ததாக தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க: நான் ரொம்பவே சென்சிடிவ்.. என்னையே நான் இழந்துவிட்டேன்- கண்ணீருடன் பேசிய க்ரித்தி ஷெட்டி!

வா வாத்தியார் படத்தின் கதையை கேட்ட அனுபவம் குறித்து பகிர்ந்த கார்த்தி :

அந்த நேர்காணலில் கார்த்தி, இயக்குநர் நலன் குமாரசாமி மற்றும் க்ரித்தி ஷெட்டி கலந்துகொண்டிருந்தனர். அதில் பேசிய நடிகர் கார்த்தி, “இந்த வா வாத்தியார் படத்தின் கதை முதலில் என்னை ரொம்பவே பயமுறுத்திச்சி. இப்படம் கத்திமேல் நடப்பது போலத்தான். நீங்க விழுந்தீங்கனா ஆண்களை எல்லோரும் சேர்ந்து காலி பண்ணிடுவாங்க. மேலும் அதே கதையை நான் மீண்டும் ஒருமுறை கேட்கும்போது எனக்கு அப்படியே ஒரு எமோஷனலாக இணைந்தது, மேலும் பயங்கரமான எதிர்பார்ப்புடன் இருந்தது. பின் இயக்குநரிடம் என்ன பண்ணிங்கனு கேட்டேன்.

இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் போட்டோ

அப்போ அவரு முதலில் உங்களிடம் கதை சொல்லும்போது எடுத்த காட்சிகளையெல்லாம், தற்போதும் மீண்டும் சேர்த்துள்ளேன் என அவர் என்னிடம் கூறினார். அவரு 2வது சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இந்த கதையை அவரு வாய்ஸ் ரெகார்ட் பண்ணி, கொரோனா நேரத்தில் எனக்கு அனுப்பியிருந்தார். அந்த கதையை கேட்டுவிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். மேலும் நலன் கூட ஒரு படம் பண்ணனும்னு நினைத்தேன், ஆனால் அவரு இவ்வளவு கஷ்டமான கதையைக் கொடுப்பாருனு எதிர்பார்க்கவில்லை” அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

வா வாத்தியார் பட கதை குறித்து கார்த்தி பேசிய வீடியோ பதிவு :

இந்த வா வாத்தியார் படத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், அந்த வழக்கு தயாரிப்பாளர் வாங்கிய கடனை மீண்டும் கொடுக்கவில்லை என்றால் படத்தை வெளியிட முடியாதது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.