Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையேனு 2025-ம் ஆண்டில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ!

List of Tamil Films of 2025 Unexpected Hit: தமிழ் சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டு ரசிகர்களிடையே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படங்களின் டாப் 5 லிஸ்ட் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

இது நம்ம லிஸ்டிலேயே இல்லையேனு 2025-ம் ஆண்டில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 Dec 2025 21:31 PM IST

மத கஜ ராஜா: தமிழ் சினிமாவில் கடந்த 12-ம் தேதி ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மத கஜ ராஜா. இந்தப் படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி எதிர்பாரத விதமாக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படம் ஆக்‌ஷன் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் என இரண்டு நாயகிகள் நடித்துள்ள நிலையில் நடிகர் சந்தானம் காமெடி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

லெவன்: தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவான படம் லெவன். கடந்த 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் அஜிஷ் எழுதி இயக்கி இருந்தார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்  பெற்றது குறிப்பிடத்தக்கது.

சக்தி திருமகன்: இயக்குநர் அருண் பிரபு எழுதி இயக்கி கடந்த கடந்த 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சக்தி திருமகன். பொலிட்டிகள் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் சுனில் கிர்பலானி, வாகை சந்திரசேகர், செல் முருகன், கிரிஷ் ஹாசன், துருத்தி ரவீந்திரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… பூஜையுடன் தொடங்கியது சிலம்பரசனின் அரசன் பட ஷூட்டிங்… வைரலாகும் வீடியோ

ஆண்பாவம் பொல்லாதது: இயக்குநர் காலீஸ்வரன் தங்கவேல் எழுதி இயக்கி கடந்த 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது. இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மாளவிகா மனோஜ் நாயகியாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

டூரிஸ்ட் ஃபேமிலி படம்: தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கி இருந்தார். ஃபேமிலி ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் இப்படிதான் இருக்கும்… வைரலாகும் தகவல்