அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
2025 Tamil Cinema Flops: பொதுவாக தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் படங்கள் வெளியீட்டிற்கு முன்னே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியாக பெரும் தோல்வியடைந்த தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
விடாமுயற்சி : தல அஜித் குமாரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் முதலில் வெளியான படம்தான் விடாமுயற்சி (Vidaamuyarchi). இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டின் இறுதியிலே தொடங்கிய நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் பல விஷயங்களை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படம் கடந்த 2025 பிப்ரவரி 6ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் அஜித் குமார் (Ajith Kumar) மற்றும் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது கடந்த 1997ம் ஆண்டில் வெளியான பிரேக்டவுன் (BreakDown) என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படமானது ரூ 225 முதல் 300 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படமானது வெளியான முதல் நாளிலே ரசிகர்களிடையே நெகடிவ் விமர்சங்களை பெற்றிருந்தது .
மேலும் இப்படம் லைகா நிறுவனத்திற்கு பெரும் தோல்வி படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது மொத்தத்தில் சுமார் ரூ 135 கோடிகள் மட்டுமே வசூல் செய்திருந்தது. அஜித் குமாருக்கு 2 ஆண்டுகளுக்கு பின் வெளியான முதல் படம் என்றாலும் இதற்கு தோல்வியே கிடைத்தது.




இதையும் படிங்க: இது நம்ம லிஸ்டிலேயே இல்லையேனு 2025-ம் ஆண்டில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ!
வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2):
சியான் விக்ரம் மற்றும் அருண் குமார் இயக்கத்தில் வெளியான படம் வீர தீர சூரன். கடந்த 2025 மார்ச் 27ம் தேதியில் இப்படம் வெளியாகியிருந்தது. அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் இப்படம் வெளியாகியிருந்தது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக இளம் நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். இந்த படமானது விமர்சனங்கள் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் திரைப்படம் (Thug Life) :
கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் வெளியான படம்தான் தக் லைஃப். இப்படத்தின் கதையை மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து எழுதியிருந்தனர். இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அபிராமி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் கமல் மற்றும் மணிரத்னம் இணைந்துதான் இப்படத்தை தயாரித்திருந்தனர்.
இப்படமானது சுமார் ரூ 260 கோடி பட்ஜெட்டில் தயாரான நிலையில், கடந்த 2025 ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இப்படத்தின் ட்ரெய்லர் வரை பல எதிர்பார்புகளை இருந்த நிலையில், வெளியான முதல் நாளிலே ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்தது. வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக தோல்வியுற்றது.
இதையும் படிங்க: இந்தி சினிமாவில் வெளியான ஜாரா ஹாட்கே ஜாரா பாச்கே படத்தை மிஸ் செய்யாதீர்கள்
மதராஸி திரைப்படம் (Madharaasi) :
சிவகார்த்திகேயனின் நடிப்பில் 23வது படமாக வெளியாகியிருந்தது மதராஸி. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஜோஜு ஜார்ஜ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில், கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.
இந்த படமானது சுமார் ரூ 120 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இந்த படமானது முழுவதும் அதிரடி ஆக்ஷன் கதையில் உருவான நிலையில், ரசிகர்களிடையே அந்தளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. அதன் காரணமாக இப்படம் வெறும் 90 முதல் 100 கோடிகளை மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சன ரீதியான தோல்வியை சந்தித்தது.
மதராஸி படம் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு :
Here’s the trailer of our #Madharaasi, an action-packed entertainer arriving September 5 💥💥💥
Tamil: https://t.co/MQfYZG4v80
Telugu: https://t.co/Jxn2bbmDX1
Hindi: https://t.co/MvSV8FKpm7
Malayalam: https://t.co/ZdjMP0VncO
Kannada: https://t.co/73Cn83n4Nu… pic.twitter.com/UzzFQrWfuY
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 24, 2025
தனுஷின் குபேரா (Kuberaa) மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) :
நடிகர் தனுஷின் இயக்கத்தில் வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த படமானது கதை வாரியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இப்படத்தின் ரிலீஸின் போது பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் வெளியானது. இதன் காரணமாக இப்படம் அந்தளவிற்கு கவனம் பெறவில்லை. இதனால் இப்படம் தோல்வியை பெற்றது. மேலும் குபேரா படமும் தமிழில் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.