தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
Top 5 Highest Grossing South Indian Films: ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய மொழிகளில் பல நூறு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. இதில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிக அளவில் வசூலில் சாதனைப் படைத்த டாப் 5 படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
காந்தாரா சாப்டர் 1: கன்னட சினிமாவில் மித்தாலஜி ஆக்ஷன் ட்ராமாவாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் காந்தாரா சாப்டர் 1. இந்தப் படம் கடந்த 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர்கள் ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மணி வசந்த், குல்ஷன் தேவையா என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் முதல் பாகம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கன்னட சினிமாவில் உருவான இந்தப் படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 853.4 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
கூலி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தில் பான் இந்திய நடிகர்கள் பலர் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்தப் படம் பாகஸ் ஆபிஸில் ரூபாய் 516.7 கோடி வசூலித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
லோகா சாப்டர் 1 சந்திரா: மலையாள சினிமாவில் மீண்டும் சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படத்தை இயக்குநர் டாம்னிக் அருண் எழுதி இயக்கி இருந்தார். படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்த் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 302.1 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… ரெட்ரோ பட வில்லன் கதாநாயகனாக அறிமுகமாகும் புது படம்.. டைட்டிலை வெளியிட்ட படக்குழு!
ஓஜி: நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஓஜி. இந்தப் படத்தை இயக்குநர் சுஜீத் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படம் ரூபாய் 298.1 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
L2: எம்புரான்: நடிகர் மோகன்லால் நாயகனாக நடித்து கடந்த 27-ம் தேதி மார்ச் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் L2: எம்புரான். இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் முன்னதாக வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. பொலிட்டிகள் வார் ஆக்ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் ரூபாய் 268.1 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… அஜித் சார் அந்த பாடலை எழுதியபோது என்னை கட்டிப்பிடிச்சு பாராட்டினார் – பாடலாசிரியர் விவேகா



