29 படத்தில் முதலில் தனுஷ்தான் பண்ணுறதாக இருந்தது.. வெளிப்படையாக சொன்ன கார்த்திக் சுப்பராஜ்!
Rathna Kumars 29: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் 29. இதை இயக்குநர் ரத்ன குமார் இயக்கிவருகிறார். இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் சமீபத்தில் நடந்த நிலையில், அதில் கார்த்திக் சுப்பராஜ், முதலில் தனுஷ் நடிக்கவிருந்ததாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல எழுத்தாளரும், இயக்குநருமாக இருந்துவருபவர் ரத்ன குமார் (Rathna Kumar). இவர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) மாஸ்டர், லியோ போன்ற படங்களில் லோகேஷ் கனகராஜுடன் (Lokesh Kanagaraj) இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இவர் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மேயாத மான் (Meyadha Maan) என்ற படத்தையும் இயக்கி ஹிட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்ததாக ஆடை (Aadai) மற்றும் குளு குளு (Kulu Kulu) போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். இந்நிலையில் இவரின் இயக்கத்தில் 4வது உருவாகிவரும் படம்தான் 29. இந்த படத்தில் நடிகர் விது (Vidhu) மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) இணைந்து நடித்தவருகின்றனர். இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் நிகழ்ச்சியானது நேற்று 2025 டிசம்பர் 10ம் தேதியில் நடைபெற்றிருந்தது.
அதில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) , 29 படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசிடியிருந்தார். அதில், இந்த படத்தின் கதையை முதலில் தனுஷ் சாரிடம் சொன்னதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஞ்சான் படத்தின் ரீ எடிட்டெட் வெர்ஷனைப் பார்த்த சூர்யா – வைரலாகும் போஸ்ட்
தனுஷிடம் 29 திரைப்படத்தின் கதை கூறியது குறித்து கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்த விஷயம் :
அந்த நிகழ்ச்சியின்போது பேசிய கார்த்திக் சுப்பராஜ், அதில் “ரத்ன குமார், சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த இயக்குநர். எதுனாலும் வெளிப்படையாக பேசுவார், அவர் பேசும் விஷயங்கள் சில எனக்கு பிடிக்காததுதான். ஆனாலும் என் வீட்டு பையன் போல அவரிடம் நல்லதை எடுத்துரைப்பேன். இந்த 29 படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து ரொம்ப வருடத்திற்கு முன்னே எங்களிடம் பேசிருக்காரு. ஆடை படத்திற்கு முன்னே இதைக் கூறியிருக்கிறார். மேலும் இந்த கதையை தனுஷ் சாரிடம் நாணங்கள் சென்று கூறியிருந்தோம்.
இதையும் படிங்க: அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
அந்த நேரத்திலே தனுஷ் சாருக்கு இந்த படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவர் எங்களிடம், நான் தற்போது முழுவதும் ஆக்ஷன் ஜானரில் இருக்கும் கதியில் நடித்துவருகிறேன், ஆனால் இப்படத்தின் கதை, நான் வளர்ந்துவந்த காலத்தில் பண்ணும் கதையை போல் இருக்கிறது. மேலும் வேறுயாராவது ஒரு இளம் நடிகர் இதை செய்தால் நன்றாக இருக்கும் என தனுஷ் சார் எங்களிடம் கூறினார்” என அதில் கார்த்திக் சுப்பராஜ் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
தனுஷ் குறித்து கார்த்திக் சுப்பராஜ் பேசிய வீடியோ பதிவு :
#Rathnakumar is a very good director and writer..🌟 He Speaks a lot outside.. I didn’t like the few things he spoke.. It was like someone from our family made a mistake..✌️ So i called him & requested him to concentrate on this..🤝
– #KarthikSubbaraj pic.twitter.com/MERts9fuAf
— Laxmi Kanth (@iammoviebuff007) December 10, 2025
இந்த 29 படமானது பிரம்மாண்டமான காதல் கதைக்களத்தில் உருவாகிவருகிறது. மேலும் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடந்துவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

