Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அஞ்சான் படத்தின் ரீ எடிட்டெட் வெர்ஷனைப் பார்த்த சூர்யா – வைரலாகும் போஸ்ட்

Anjaan Movie Re edited Version: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக இவரது நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தின் ரீ எடிட்டட் வெர்ஷனை இயக்குநருடன் நடிகர் சூர்யா இணைந்து பார்த்துள்ளார்.

அஞ்சான் படத்தின் ரீ எடிட்டெட் வெர்ஷனைப் பார்த்த சூர்யா – வைரலாகும் போஸ்ட்
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Dec 2025 13:47 PM IST

கோலிவுட் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும் தற்போது நடிகர் சூர்யா அடுத்தடுத்து மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படம், தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 ஆகியப் படங்கள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குநர்கள் மட்டும் இன்றி தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமா இயக்குநர்களுடன் தொடர்ந்து தற்போது பணியாற்றி வருகிறார் நடிகர் சூர்யா.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ழகரம் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் முதல் படமாக உருவாகிறது சூர்யா 47 படம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா மற்றும் நஸ்லேன் ஆகியோர் இணைந்து முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படங்களில் பிசியாக இருந்துவரும் நிலையில் தற்போது அஞ்சான் படத்தின் ரீ எடிட்டட் வெர்ஷனைப் பார்த்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஞ்சான் படத்தின் ரீ எடிட்டெட் வெர்ஷனைப் பார்த்த சூர்யா:

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான அஞ்சான் படத்தை தற்போது ரீ எடிட் செய்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர். இந்த வெர்ஷனை நடிகர் சூர்யா இயக்குநர் லிங்குசாமி மற்றும் ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரெட்ரோ பட வில்லன் கதாநாயகனாக அறிமுகமாகும் புது படம்.. டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அஞ்சான் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அஜித் சார் அந்த பாடலை எழுதியபோது என்னை கட்டிப்பிடிச்சு பாராட்டினார் – பாடலாசிரியர் விவேகா