வசூலில் பட்டையை கிளப்பும் தேரே இஸ்க் மெய்ன் படம்… கொண்டாட்டத்தில் படக்குழு
Tere Ishk Mein Movie Collection: நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படம் வெளியாகி 13 நாட்களை கடந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் அவ்வபோது இந்தி சினிமாவிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி முன்னதாக குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் இட்லி கடை படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியான படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். இவர் இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இந்தி சினிமாவில் நடிகர் தனுஷை அறிமுகம் செய்து வைத்தது இயக்குநர் ஆனந்த் எல் ராய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




வசூலில் பட்டையை கிளப்பும் தேரே இஸ்க் மெய்ன் படம்:
அதன்படி தேரே இஸ்க் மெய்ன் படம் கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியானது. அதன்படி திரையரங்குகளில் வெளியாகி 13 நாட்கள் கடந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்து படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் இதுவரை ரூபாய் 152.01 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Also Read… Anirudh: விஜய் சாரின் கடைசி ஆடியோ லான்ச்.. நிச்சயமாக தெறிக்க விடுறோம் – அனிருத் பேச்சு!
தேரே இஸ்க் மெய்ன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
ISHK that’s travelling farther than ever!❤️🔥💯#TereIshkMein now in cinemas worldwide, in Hindi, Tamil and Telugu.
Book your tickets now: link: https://t.co/bhQRYGBCFc@dhanushkraja @kritisanon @arrahman @aanandlrai #BhushanKumar #HimanshuSharma #KrishanKumar @Irshad_kamil… pic.twitter.com/yc808t39pG
— T-Series (@TSeries) December 11, 2025
Also Read… கேரளாவில் விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… என்ன தெரியுமா?