Kombuseevi: துப்பாக்கிய புடிங்க பாண்டி.. மாறுபட்ட கதைக்களத்தில் வெளியானது கொம்புசீவி பட ட்ரெய்லர்!
Kombuseevi Trailer : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரும், முன்னாள் நடிகர் விஜயகாந்தின் மகனாக இருப்பவர்தான் சண்முக பாண்டியன். இவர் மற்றும் சரத்குமாரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவந்த படம்தான் கொம்புசீவி. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், படக்குழு அதிரடி ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர்தான் பொன்ராம் (Ponram). இவர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” (Varuthapadatha Valibar Sangam) என்ற படத்தை இயக்கி மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவரின் இயக்கத்தில் வரும் 2025 டிசம்பர் 19ம் தேதியில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் கொம்புசீவி (Kombuseevi). இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் (Sarathkumar) மற்றும் சண்முக பாண்டியன் (Sanmuga Pandian) இணைந்து நடித்துள்ளனர். சண்முகபாண்டியன் நடிகர் விஜயகாந்தின் (Vijayakanth) மகன். இவர் ஏற்கனவே தமிழில் சில படங்களில் நடித்திருந்த நிலையில், இவரின் நடிப்பில் இறுதியாக படைத்தலைவன் என்ற படம் வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக 2025ம் ஆண்டில் 2வது வெளியாக தயாராகிவரும் படம் கொம்புசீவி. இந்த படமானது உசிலம்பட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இதில் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் மாமா மருமகன் வேடத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது கொம்புசீவி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: மகாசேனா முதல் அகாண்டா 2 வரை நாளை ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ
கொம்புசீவி திரைப்படத்தின் ட்ரெய்லர் பதிவை வெளியிட்ட படக்குழு :
Brace Yoursevles For The Full-on Mass Entertainer! #Kombuseevi Trailer is Officially Out Now! 🎬😎
🎬 #KombuseeviFromDec19@realsarathkumar @ShanmugaP_Actor #Tharnika @ponramVVS @StarCinemas_ @mukesh_chelliah @balasubramaniem… pic.twitter.com/s1S5iVAkEQ
— Saregama South (@saregamasouth) December 11, 2025
கொம்புசீவி படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு :
இந்த கொம்புசீவி படத்தின் ட்ரெய்லரின் தொடக்கம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கதையில் ஆரம்பமாகிறது. மேலும் தனது தாய் மாமாவான சரத்குமார் பார்க்கும் கடத்தல் தொழிலை, மருமகன் சண்முக பாண்டியன் பார்க்க தொடங்குகிறார். அதன் மூலமாக வரும் பிரச்சனைகள் மற்றும் தனது கிராமத்தை எவ்வாறு பாதுகாக்கிறார் என்பது இப்படத்தின் மைய கதையாக இருக்கிறது.
இதையும் படிங்க: வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா? சோகத்தில் கார்த்தி ரசிகர்கள்!
மேலும் சரத்குமார், சண்முக பாண்டியனுக்கும் மற்றும் போலீசிற்கு இடையே நடக்கும் ஆக்ஷ்ன் தொடர்பாக இப்படத்தின் மீதி கதை அமைந்துள்ளது. தற்போது வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
கொம்புசீவி படத்தின் ப்ரீ புக்கிங் எப்போது :
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் உருவான இப்படத்தை, ஸ்டார் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 19ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக வெளியாகிறது. இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், வரும் 2025 டிசம்பர் 15ம் தேதிக்கும் மேல் இப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கும் என் ஏதிர்பார்க்கப்படுகிறது.