AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகாசேனா முதல் அகாண்டா 2 வரை நாளை ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ

Theatre Release Movies List : தமிழ் சினிமாவில் நாளை வெளியாக இருந்த இரண்டு முக்கியப் படங்களின் வெளியீடு தள்ளிப்போன நிலையில் வேறு என்ன படங்கள் எல்லாம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறித்த தொகுப்பை தற்போது இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

மகாசேனா முதல் அகாண்டா 2 வரை நாளை ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Dec 2025 18:54 PM IST

மகாசேனா: தமிழ் சினிமாவில் பல வித்யாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் நடிகர் விமல். இவர் களவாணி படத்தின் மூலமாகவே தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து பலப் படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் ஜீ 5 ஓடிடியில் வெளியான இவரது விலங்கு இணையதள தொடர் இவரின் சினிமா வாழ்க்கையை மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரை தொடர்ந்து மீண்டும் விமலுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகாசேனா. இந்தப் படத்தை இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கி உள்ளார். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் விமல் உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு மற்றும் ஜான் விஜய் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை 12-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாண்புமிகு பறை: தமிழ் சினிமாவில் உருவாகி உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மாண்புமிகு பறை. இந்தப் படத்தை இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் எழுதி இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகரும் பட்டிமன்ற பேச்சாளருமான லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை 12-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!

அகாண்டா 2: தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் சினிமாவில் நாயகனாக நடித்து முன்னதாக இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் அகாண்டா. ஃபேண்டசி ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் படம் நாளை 12-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read… Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?

Follow Us