Lockdown: அனுபமா பரமேஸ்வரனுக்கு வந்த சோதனை.. மீண்டும் தள்ளிப்போகும் லாக்டவுன் படம்!
Lock Down Movie Release Delayed Twice: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள படம்தான் லாக்டவுன். இந்த படமானது கடந்த 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவித்துள்ளது.
நடிகை அனுபமான பரமேஸ்வரன் (Anupamana Parameswaran) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் (Premam) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாகவே அமைந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடிக்கும் வாய்புகள் குவிந்திருந்தது என்றே கூறலாம். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பைசன் (Bison). இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் இப்படம் வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக வுமன் செண்ட்ரிக் கதைக்களத்தில் உருவாகிவந்த படம்தான் லாக்டவுன் (Lock Down). இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். ஜீவா (AR.Jeeva) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) நிறுவனமானது தயாரித்திருந்தது.
இந்நிலையில் முதலில் இப்படம் கடந்த 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் தொடர் மழையின் காரணமாக இப்படம் டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தேதி பின்னர் அறிவிக்கப்பட்டுள்ள என 2வது முறையாக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: அஞ்சான் படத்தின் ரீ எடிட்டெட் வெர்ஷனைப் பார்த்த சூர்யா – வைரலாகும் போஸ்ட்
லாக்டவுன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்து தொடர்பாக படக்குழு அறிவித்த பதிவு :
#Lockdown has been postponed. The new release date will be shared soon. 🗓️#LockdownInCinemasSoon pic.twitter.com/wKPkBQF9UE
— Lyca Productions (@LycaProductions) December 11, 2025
இந்த லாக்டவுன் திரைப்படமானது அதிரடி திரில்லர் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படமானது ஒரு பெண் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குநர் ஜீவாவிற்கு இதுதான் முதல் படம் என்றாலும், லைகா நிறுவனத்தின் கீழ் மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள், அனுபமா பரமேசுவரன், ரேவதி, சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் மற்றும் ப்ரியா வெங்கட் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் – அனிருத்
இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட 2 முறை வெளியாகி மீண்டும் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் ஒத்திவைப்பிற்கு காரணமாக மழை என கூறப்பட்ட நிலையில், 2வது ஒத்திவைப்பிற்கான காரணத்தை படக்குழு தெளிவாக கூறவில்லை. இதன் காரணமாக இப்படம் வரும் 2025 டிசம்பர் இறுதியில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.