2025-ம் ஆண்டில் இயல்பான நடிப்பால் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படங்களின் லிஸ்ட் இதோ!
Best Naturalistic Acting in Tamil Cinema 2025 : தமிழ் சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நடிகர்கள் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த சிறந்த படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
3 BHK: தமிழ் சினிமாவில் மக்களுக்கு மிகவும் நெருக்கமான கதையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் 3 BHK. இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கி இருந்தார். மிடில் கிளாஸ் குடும்பத்தில் வாழும் ஒவ்வொரு நபருக்கு இருக்கும் சொந்த வீடு என்ற கனவை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் சைத்ரா ஜே ஆச்சார், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத், யோகி பாபு, விவேக் பிரசன்னா மற்றும் தலைவாசல் விஜய் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிபிடத்தகது. இந்தப் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
டிஎன்ஏ: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் வெளியான படம் டிஎன்ஏ. இந்தப் படம் கடந்த 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
Also Read… அஞ்சான் படத்தின் ரீ எடிட்டெட் வெர்ஷனைப் பார்த்த சூர்யா – வைரலாகும் போஸ்ட்
பறந்து போ: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் அனைத்தும் மிகவும் அழுத்தமான கதையை மையமாக வைத்து வெளியாகி இருந்தது. ஆனால் இறுதியாக வெளியான பறந்து போ படம் மிகவும் காமெடியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும் இருக்கிறது இந்த பறந்து போ படம். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை கிரேஸ் ஆண்டனி நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… மெய்யழகன் படத்திற்காக பிரேம் குமார் தமிழ் ரசிகர்கள் மீது கோபமாக இல்லை – நடிகர் கார்த்தி



