Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2025ல் எதிர்பார்த்த வெற்றியை பெற்று அதிகம் வசூல் செய்த படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ!

Highest Grossing Tamil Films In 2025: தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் சிறு பட்ஜெட் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் வரை பல்வேறு கேட்டகிரியில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் தமிழில் வெளியாகி அதிகம் வசூல் செய்து சூப்பர் ஹிட்டடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

2025ல் எதிர்பார்த்த வெற்றியை பெற்று அதிகம் வசூல் செய்த படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ!
2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Dec 2025 00:23 AM IST

டிராகன் திரைப்படம்: நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியான திரைப்படம்தான் டிராகன் (Dragon). இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இப்படமானது அதிரடி காதல், எமோஷனல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran), கயாடு லோஹர் (Kayadu Lohar) , கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் மேனன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், தனுஷின் (Dhanush)நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்திற்கு போட்டியாக வெளியாகியிருந்தது. இப்படத்தின் காட்சிகள் முதல் பாடல்கள் வரை அனைத்தும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படமானது வெளியாகிய 4 நாட்களிலே சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட்டடித்திருந்தது.

மேலும் உலகளாவிய வசூலில் மொத்தமாக சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், 2025ம் ஆண்டில் முதலில் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த படமாக இது அமைந்திருந்தது.

இதையும் படிங்க: ஆர்யாவின் பிறந்த நாளில் பூஜையுடன் தொடங்கியது 40-வது படம்!

குட் பேட் அக்லி திரைப்படம் :

அஜித் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான படம்தான் குட் பேட் அக்லி. இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தார். இவர்களுடன் நடிகர்கள் சுனில், பிரசன்னா, பிரபு மற்றும் சிம்ரன் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான இப்படம் மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட்டாகி திரையரங்குகளில் வெளியாகிவந்தது. அந்த வகையில் இப்படமானது உலகளவில் சுமார் ரூ 250 கோடிகள் கிட்ட வசூல் செய்திருந்தது. 1 வருடத்திற்கு பின் அஜித் குமாருக்கு இது வெற்றி படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ரோ திரைப்படம் :

சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் கடந்த 2025ம் ஆனது மே மாதத்தில் வெளியான படம்தான் ரெட்ரோ. இந்த படத்தில் நடிகர்கள் விது, பூஜா ஹெக்டே, ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாசர் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது 5 வருடங்களுக்கு பின் சூர்யாவிற்கு ஒரு வெற்றி படமாக அமைந்திருந்தது. இப்படம் கிட்டத்தட்ட உலகளவில் மொத்தமாக சுமார் ரூ 234 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி திரைப்படம் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமாக வெளியாகியிருந்தது கூலி. இந்த படத்தை பேமஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் ரஜினிகாந்த், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சௌபின் ஷாஹிர் மற்றும் ஆமிர்கான் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், ஆரம்பத்தில் திரையரங்குகளில் நெகடிவ் விமர்சனங்களை பெற்றுவந்தது. அதனை தொடர்ந்து திரையரங்குகளில் ஓரளவு வரவேற்பை பெற்றுவந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க: அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!

அந்த வகையில் இப்படமானது மொத்தமாக சுமார் ரூ 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இந்த 2025ம் ஆண்டில் தமிழில் அதிகம் வசூல் செய்த படமாக கூலி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குபேரா மற்றும் தேரே இஷக் மே திரைப்படங்கள் :

நடிகர் தனுஷின் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்ட வெளியான படம் குபேரா. இதை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கையிருந்தார். இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். கடந்த 2025 ஜூன் மதத்தின் இறுதியில் வெளியான இப்படம் சுமார் ரூ 140 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

தனுஷின் தேரே இஷ்க் மே படத்தின் வசூல் விவரம் தொடர்பான பதிவு :

மேலும் தனுஷின் நடிப்பில் இறுதியாக வெளியான பட தேரே இஷ்க் மே இப்படம் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்தி மொழியை அடிப்படையாக கொண்டு வெளியான இப்படம் இதுவரை சுமார் ரூ 150 கோடிகளை கடந்து வசூல் செய்துவாருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.