இனிமேல் அவர் நடிக்க மாட்டாரானு ஒரு வருத்தம் இருக்கு… விஜய் குறித்து எமோஷ்னலாக பேசிய அனிருத்
Anirudh Ravichander: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது நடிகர் விஜய் மற்றும் ஜன நாயகன் படம் குறித்து பேசிய விசயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் அனிருத். இவர் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இவரது இசையில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலருக்கு தொடர்ந்து தனது மாஸான இசையை அளித்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். தொடர்ந்து இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். தளபதி விஜய் நாயகனாக நடித்து வெளியாக காத்திருக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து உல்ளார். முன்னதாக இந்தப் படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




இனிமேல் அவர் நடிக்க மாட்டாரானு ஒரு வருத்தம் இருக்கு:
இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, எப்பவும் நான் விஜய் சார் பத்திற்கு இசையமைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் இந்த முறை அப்படி இல்லை மிகவும் வித்யாசமாக இருந்தது.
தொடர்ந்து கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ ஆகிய படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்த நான் தற்போது ஜன நாயகன் படத்திற்கு ஒன் லாஸ்ட் டைம் சிறப்பாக செய்ய விரும்புகிறேன். மேலும் அவர் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனை நான் விஜய் சார்க்கு கால் செய்து பேசினேன் என்று அனிருத் தெரிவித்துள்ளார்.
Also Read… பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் பார்வதி மீது புகார் அளித்த அரோரா – வீடியோ இதோ
இணையத்தில் கவனம் பெறும் அனிருத் பேச்சு:
#Anirudh about #JanaNayagan 🥺
– Whenever I score for #ThalapathyVijay sir, it makes me happy, but this time it hit differently.
– I actually got emotional when I wished #Vijay sir. From #Kaththi, #Master, #Beast to #LEO… and now his last film.pic.twitter.com/Vhrnj2DBzr— Movie Tamil (@_MovieTamil) December 12, 2025
Also Read… ரத்தானதா நிவேதா பெத்துராஜினின் திருமணம்… என்ன நடந்தது?