Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் பார்வதி மீது புகார் அளித்த அரோரா – வீடியோ இதோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் வழக்காடு மன்றம் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தொடர்ந்து யார் யார் மீது தங்களுக்கு வழக்கு உள்ளது என்று தெரிவித்து அதற்காக நீதி கேட்கிறார்கள்.

பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் பார்வதி மீது புகார் அளித்த அரோரா – வீடியோ இதோ
பிக்பாஸ்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 11 Dec 2025 10:43 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் வழக்காடு மன்றம் டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது 10-வது வாரம் எட்டியுள்ளது. இந்த சீசனுக்கு முன்னதாக ஒளிபரப்பான 8 சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி அதிக அளவில் ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி பலமுறை போட்டியாளர்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து போட்டியாளர்கள் அவர்களின் டாக்ஸிக்கான முகத்தையே காட்டி வருகின்றனர். இவர்கள் எல்லாம் எப்படி இத்தனை நாட்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து பார்வையாளர்களும் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் டாஸ்க் சற்று சுவாரஸ்யமாக இருக்கிறது என்றும் கருத்துகள் வருகின்றது.

அதன்படி ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் பல டாஸ்குகள் வழங்கப்படுகின்றது. அதன்படி இந்த வாரம் வழக்காடு மன்றம் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் மீது உள்ள புகார்களை தெரிவித்து அதற்கான நியாயத்தை பெறும் வகையில் இந்த டாஸ்க் விளையாடப்பட்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று இந்த டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. அதில் போட்டியாளர் அரோரா போட்டியாளர் பார்வதி மீது புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் பார்வதி மீது புகார் அளித்த அரோரா:

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் இன்றி ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் இடையே காதல் ஏற்படுவது தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றது. இந்த முறை முக்கோண காதலாக அரோராவை தவறாக பார்வதி சித்தரித்தது குறித்து அவர் மீது வழக்காடு மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ரத்தானதா நிவேதா பெத்துராஜினின் திருமணம்… என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் வழக்காடு மன்றத்தில் எஃப்ஜே மீது புகாரளித்த பார்வதி… என்ன சொல்லியிருக்கார் பாருங்க