Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2025-ம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் நடந்த சர்ச்சைகள் என்னென்ன? லிஸ்ட் இதோ

Controversies in Tamil Cinema: தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது ஒரு பக்கம் இருந்தாலும் கோலிவுட் சினிமாவில் பிரபலங்கள் பலர் சர்சைகளில் சிக்கி தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்ததும் இந்த 2025-ம் ஆண்டில் நடக்கதான் செய்தது. அப்படி சர்ச்சைகளை ஏற்படுத்திய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்.

2025-ம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் நடந்த சர்ச்சைகள் என்னென்ன? லிஸ்ட் இதோ
நடிகர்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 Dec 2025 22:03 PM IST

நடிகர் கமல் ஹாசன்: தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அதில் கன்ன மொழி சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சிவராஜ் குமாரும் கலந்துகொண்டார். அவரைக் குறித்து நடிகர் கமல் பேசுகையில் கன்னடம் தமிழில் இருந்த பிரிந்த மொழி, அவரும் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கமல் ஹாசன் தெரிவித்து இருந்தார். இது கன்னட மொழியை அவமதிப்பதாக கூறி கன்னடர்கள் நடிகர் கமல் ஹாசனுக்கு எதிராகப் போரட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தக் லைஃப் படம் குறிப்பிட்ட நேரத்தில் கர்நாடகாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா: தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்கஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமையல் கலைஞராக மிகவும் பிரபமலமாக இருக்கிறார். இவருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த ஜாய் கிரிஸில்டா தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து குழந்தை கொடுத்துவிட்டு ஏமாற்றியதாக ஒரு புகாரை அளித்தார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Billa: வசூலின் உச்சம்.. வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த அஜித் குமாரின் பில்லா திரைப்படம்!

கௌரி கிஷன்: மலையாள சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை கௌரி கிஷன் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் 96 படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் அதர்ஸ் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் யூடியூபர் ஒருவர் தவறான கேள்வி எழுப்பியதை கௌரி கிஷன் எதிர்த்து பேசினார். அதற்காக பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதவரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read…  Year Ender: 2025ம் ஆண்டில் உருவாகும் என அறிவிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட படங்கள் என்னென்ன?