Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது ஆரோமலே படம்… விமர்சனம் இதோ!

Aaromaley Movie OTT Review : தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஆரோமலே. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது.

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது ஆரோமலே படம்… விமர்சனம் இதோ!
ஆரோமலேImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Dec 2025 21:32 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக உச்ச நடிகர்களின் படங்கள் மட்டும் இன்றி சின்ன சின்ன பட்ஜெட்களில் நடிக்கும் நடிகர்களின் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் ரசிகர்களும் சிறந்த படமாக இருந்தால் அது எந்த நடிகராக இருந்தாலும் தொடர்ந்து தங்களது ஆதவரை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 7-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஆரோமலே. இந்தப் படத்தை இயக்குநர் சாரங் தியாகு எழுதி இயக்கி இருந்த நிலையில் திரைக்கதையை சாரங் தியாகு, கிஷன் தாஸ், கௌசிக் சம்பத், ஆஷாமீரா ஐயப்பன் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கிஷன் தாஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் ஷிவாத்மிகா ராஜசேகர், VTV கணேஷ், சந்தான பாரதி, சிபி சக்ரவர்த்தி, ராஜா ராணி பாண்டியன், துளசி, நமிரிதா எம்.வி. சந்தியா வின்ஃப்ரெட், காத்தாடி ராமமூர்த்தி, சிலம்பரசன், மேகா ஆகாஷ், டீஜய் அருணாசலம் ஆகியோர் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான மினி ஸ்டூடியோ எல்எல்பி சார்பாக தயாரிப்பாளர் எஸ். வினோத் குமார் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது ஆரோமலே படம் எப்படி இருக்கு?

நடிகர் கிஷன் தாஸ் பள்ளியில் படிக்கும் போது சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்த பிறகு காதலிக்க வேணும் என்ற ஆசையில் இருக்கிறார். தொடர்ந்து பள்ளியில் இருந்தே காதலிக்கும் கிஷன் தாஸிற்கு எந்த காதலும் கைகூடவில்லை. அதனைத் தொடர்ந்து பிடிக்காமல் தனது குடும்பத்தின் கட்டாயத்தின் காரணமாக மேட்ரிமோனியில் வேலைக்கு செல்கிறார்.

Also Read… Silambarasan: சிலம்பரசன் என்ற பெயர் STR-னு மாற காரணம் இதுதான்.. கலகலப்பாக பகிர்ந்த சிலம்பரசன்!

அங்கு மேனேஜராக இருக்கும் ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் கிஷன் தாஸ் இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்படுகின்றது. ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது வருத்தத்தை மறந்து நண்பர்களாக மாறுகிறார்கள். அப்போது ஷிவாத்மிகா ராஜசேகர் மீது கிஷன் தாஸிற்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை ஷிவாத்மிகா ராஜசேகர் ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹார்ஸ்டாரின் வெளியாகி உள்ளது.

Also Read… பிக்பாஸில் ரம்யா ஜோவை தொடர்ந்து இன்று வெளியேறபோவது இவர்தான்… கசிந்தது தகவல்