முடிவடைந்தது அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் படத்தின் படப்பிடிப்பு… வைரலாகும் போஸ்ட்
Ashok Selvan and Nimisha Sajayan Movie: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் தற்போது புதிதாக உருவாகியுள்ள படம் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்பு நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இறுதியாக நடிகர் அசோக் செல்வன் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியன தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரும் கேங்ஸ்டராக நடித்து இருந்த நிலையில் அவர்களை பிடிக்க வரும் காவல்துறை அதிகாரியாக நடிகர் அசோக் செல்வன் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து படங்களில் மட்டும் நடிக்காமல் அவ்வபோது இணையதள தொடர்களிலும் நடிகர் அசோக் செல்வன் நடித்து வருகிறார். இவரது இயல்பான நடிப்பில் காரணமாகவே இவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அந்த வகையில் தற்போது நடிகர் அசோக் செல்வன் புதுப் படம் ஒன்றில் கமிட்டாகி நடித்துள்ளார்.




முடிவடைந்தது அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் படத்தின் படப்பிடிப்பு:
இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் மற்றும் நிமிஷா சஜயன் இருவரும் புதுப் படத்திற்காக ஒப்பந்தமாகினர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நிமிஷா சஜயன் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இறுதியாக டிஎன்ஏ படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் எழுதி இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
Also Read… இனிமேல் அவர் நடிக்க மாட்டாரானு ஒரு வருத்தம் இருக்கு… விஜய் குறித்து எமோஷ்னலாக பேசிய அனிருத்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wrapped on set 🎬
The experience unfolds soon ❤️✨Starring @AshokSelvan #NimishaSajayan 🌟
Directed by @cbmanikandan 🎬
A @dhibuofficial musical 🎶#ProductionNo6 ❤️ @Pushparaj_DOP @barathvikraman @IshariKGanesh @Yuvrajganesan @kushmithaganesh @MillionOffl @VelsFilmIntl… pic.twitter.com/Nhvmh7NrqX— Vels Film International (@VelsFilmIntl) December 13, 2025
Also Read… கிச்சா சுதீப்பின் மார்க் படத்தில் இணைந்த நடிகர் யோகி பாபு – போஸ்டர் வெளியிட்ட படக்குழு