Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல் ஹாசன்… நெகிழ்ந்த ரஜினிகாந்த்

Rajinikanth Thanks To Kamal Haasan: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல் ஹாசன்… நெகிழ்ந்த ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Dec 2025 18:41 PM IST

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது 50 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனை திரையுலகினரும் ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் தற்போது ஜெயிலர் 2 படத்தில் படு பிசியாக நடித்து வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது படக்குழுவினருடன் நேற்று பிறந்த நாளை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்தது. ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவிக்க வீட்டின் அருகே வரும் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த பிறந்த நாளில் அவர் ஷூட்டிங்கில் இருந்ததால் வீட்டிற்கு வந்த ரசிகர்களை சந்திக்க இயலவில்லை.

இந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை நேரிலும் சமூக வலைதளத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் இருக்கும் பிரபலங்களும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளிற்கு நடிகர் கமல் ஹாசனும் வாழ்த்து பதிவை வெளியிட்டு இருந்தார்.

பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல் ஹாசன்:

ஒரு குறிப்பிடத்தக்க வாழ்வின் 75 ஆண்டுகள். புகழ்பெற்ற சினிமாவின் 50 ஆண்டுகள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நண்பா ரஜினிகாந்த் என கமல் ஹாசன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆர்யாவின் பிறந்த நாளில் பூஜையுடன் தொடங்கியது 40-வது படம்!