Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு பேரே வரலாறு… வைபாக வெளியானது ஜன நாயகன் 2-வது சிங்கிள் வீடியோ புரோமோ

Oru Pere Varalaaru Song Promo Video: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலான நிலையில் நாளை இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளது.

ஒரு பேரே வரலாறு… வைபாக வெளியானது ஜன நாயகன் 2-வது சிங்கிள் வீடியோ புரோமோ
ஒரு பேரே வரலாறுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Dec 2025 18:35 PM IST

கோலிவுட் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் 69-வது படமாகும். முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் 68-வது படமாக வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் 69-வது படமாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். இந்த படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் வெளியீடு குறித்தும் இசை வெளியீடு குறித்த அப்டேட்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் வெளியான பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இருந்து புதிய அப்பேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

வைபாக வெளியானது ஜன நாயகன் 2-வது சிங்கிள் வீடியோ புரோமோ:

இந்த நிலையில் நாளை ஜன நாயகன் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் நாளை 18-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த சிங்கிள் “ஒரு பேரே வரலேறு, அழுச்சாலும் அழியாது” என்ற பாடலின் புரோமோ வீடியோவை தற்போது ஜன நாயகன் படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே தற்போது நல்ல வரவேற்ஐப் பெற்று வருகின்றது.

Also Read… ஃபேண்டசி ஆக்‌ஷன் ட்ராமா பணியில் வெளியானது மோகன்லாலின் விருஷபா ட்ரெய்லர்

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Parasakthi: பராசக்தி படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்? அட இத்தனை கோடியா?