Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஃபேண்டசி ஆக்‌ஷன் ட்ராமா பணியில் வெளியானது மோகன்லாலின் விருஷபா ட்ரெய்லர்

Vrusshabha Official Trailer Malayalam | நடிகர் மோகன்லால் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விருஷபா.

ஃபேண்டசி ஆக்‌ஷன் ட்ராமா பணியில் வெளியானது மோகன்லாலின் விருஷபா ட்ரெய்லர்
விருஷபா ட்ரெய்லர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Dec 2025 20:11 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் மலையாள சினிமாவில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லாலின் வாரிசுகளான பிரணவ் மோகன்லால் மற்றும் விஷ்மயா மோகன்லால் இருவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். வாரிசுகள் நடிகர்களாக வந்தாலும் தனது நடிப்பை விட்டு ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அதனபடி நடிகர் மோகன்லால் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து எல்.2 எம்புரான், துடரும்,ஹிருதயப்பூர்வம் என அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இந்த மூன்று படங்களும் ஒவ்வொரு ஜானரில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விருஷபா. ஃபேண்டசி ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் வருகின்ற 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வெளியானது மோகன்லாலின் விருஷபா ட்ரெய்லர்:

கடந்த காலம் ஒருபோதும் இறப்பதில்லை. அது ஒவ்வொரு பிறப்பிலும் ஆசீர்வதிக்கப்படுகிறது என்ற வரிகளுடன் வெளியான இந்த ட்ரெய்லரைப் பார்க்கும் போது தற்போது இருக்கும் மோகன்லாலிற்கு கடந்த காலத்தில் தான் ஒரு மன்னராக இருந்த நினைவுகள் தொடர்ந்து கனவுகளின் மூலம் வருவது போல தெரிகிரது. இதனால் அவருடைய தற்போதைய வாழ்க்கையில் என்ன எல்லாம் மாற்றங்கள் நடக்கிறது என்பது படத்தின் கதையாக இருக்கும் என்று ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.

Also Read… AR.Murugadoss: ரெட்ட தல என்பது எனது ட்ரீம் டைட்டில்… அத என்னிடம் இருந்து பிடிங்கிட்டாங்க – ஏ.ஆர். முருகதாஸ்!

மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 2025-ம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் நடந்த சர்ச்சைகள் என்னென்ன? லிஸ்ட் இதோ