AR.Murugadoss: ரெட்ட தல என்பது எனது ட்ரீம் டைட்டில்… அத என்னிடம் இருந்து பிடிங்கிட்டாங்க – ஏ.ஆர். முருகதாஸ்!
AR Murugadoss About Retta Thala: தளபதி விஜய் முதல் அஜித் குமார் வரை பல்வேறு உச்ச நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் சமீபத்தில் நடந்த ரெட்ட தல படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சில் கலந்துகொண்டிருந்தார். அதில் பேசிய அவர், ரெட்ட தல படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் (A. Murugadoss) தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் பாலிவுட் மற்றும் கோலிவுட் என இரு சினிமாவிலும் படங்கள் வெளியாகியிருந்தது. நடிகர் சல்மான் கான் (Salmaan Khan) நடிப்பில் பாலிவுட்டில் சிக்கந்தர் (Sikandar) என்ற படமும், நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் தமிழில் மதராஸி (Madharaasi)என்ற படமும் வெளியாகியிருந்தது. இந்த இரு படங்களுமே இவருக்கு ஓரளவுதான் வரவேற்பைப் பெற்று கொடுத்திருந்தது. இதை அடுத்ததாக இவர் மேலும் புதிய படத்திற்காக கதை எழுதும் பணியில் ஆழ்ந்துள்ளார். அந்த வகையில் நேற்று 2025 டிசம்பர் 14ம் தேதியில் சென்னையில் நடைபெற்றிருந்த ரெட்ட தல (Retta Thala) படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.
அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் (Kirsh Thirukumaran) , நடிகர் அருண் விஜய் (Arun Vijay) மற்றும் ரெட்ட தல படம் குறித்து தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதில் அவர், “ரெட்ட தல என்பது தனது ட்ரீம் டைட்டில்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வா வாத்தியார் படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு
ரெட்ட தல பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசிய விஷயம் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், அதில் “திருக்குமரன் முன்பு எனது உதவி இயக்குநராக இருந்தவாறு, கஜினி, 7ஆம் அறிவு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான நபரும் கூட, அப்போது வெறும் திருகுமாரனாக இருந்தாரு, இப்போ கிரிஷ் திருகுமாரனாக இருக்கிறார். மிகவும் திறமையான நபர். இந்த ரெட்ட தல என்ற டைட்டிலை நான் வைத்து ஒரு புதிய படத்தை இயக்கலாம் என முடிவு செய்திருந்தேன். ரொம்ப நாட்களாக எனது கனவாக வைத்திருந்த டைட்டில். எப்போது கிரிஷ் திருக்குமரன், எனக்கு இந்த டைட்டில் வேணும் சார் என என்னிடம் கேட்டிருந்தார், அதனால் நான் கொடுத்துவிட்டேன்.
இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸில் எந்த மாற்றமும் இல்லை – வைரலாகும் தகவல்
ரெட்ட தல படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேசிய வீடியோ :
#ARMurugadoss:
“#RettaThala was a dream title, which I want to film🤞. But director has asked the title, so I’ve given. Dir Thirukumaran worked as AD in Ghajini, 7amArivu. He directed MaanKarathey under my production🤝. ArunVijay looks stunning in Trailer” pic.twitter.com/384Hcdfxk0— AmuthaBharathi (@CinemaWithAB) December 15, 2025
கொடுக்கவில்லை என்றால் என்னிடம் இருந்து பிடிங்கிருப்பாரு. எனக்கு ரொம்ப பிடித்த டைட்டில். அது சரியான நேரத்தில், சரியான திரைப்படத்திற்கு அமைந்துள்ளது என்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மேலும் ரெட்ட தல படத்தின் ட்ரெய்லரை நான் பார்த்தேன், மிகவும் சிறப்பாக வந்திருக்கிறேது. நிச்சயம் இப்படம் வெற்றியை கொடுக்கும் நான் நினைக்கிறேன். எனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவர் ஒரு படத்தை இயக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்” என அவர் தெரிவித்திருந்தார்.



