வா வாத்தியார் படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு
Vaa Vaathiyaar: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி முன்னதாக திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் வா வாத்தியார். இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில் தற்போது படம் வெளியீட்டு தேதி குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் கார்த்தி. கிராமத்து இளைஞன், சிட்டி இளைஞன், ரொமாண்டிக் ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிகர் கார்த்தி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றார். அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் மெய்யழகன். இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் குமார் எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர் அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஃபீல் குட் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இந்தப் படம் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் இடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் கார்த்தியின் நடிப்பை ரசிகர்கள் கொடாடித் தீர்த்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்தடுத்தப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் வா வாத்தியார். இயக்குநர் நலன் குமாரசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.




வா வாத்தியார் படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
அதன்படி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள இந்த வா வாத்தியார் படம் கடந்த 12-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் கடன் பிரச்னை காரணமக படத்தின் வெளியீட்டிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வா வாத்தியார் படம் வெளியாகும் அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Karthi‘s #VaaVaathiyaar is scheduled to release on the afternoon of December 24th…..💥
Do you know why this film is being released in the afternoon…..❓ pic.twitter.com/xPZfR1BiAa
— Movie Tamil (@_MovieTamil) December 15, 2025
Also Read… Parasakthi: ‘ஹே நமக்கான காலம்’… பராசக்தி படத்திலிருந்து வெளியானது 3வது பாடல்!