Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேலி செய்தவர்களுக்கு இந்த தீர்ப்பை அர்ப்பணிக்கிறேன்.. தாக்குதல் வழக்கு குறித்து நடிகை வெளியிட்ட பதிவு வைரல்!

Malayalam Actress Assault Case: மலையாள சினிமாவில் பிரபல நடிகை தாக்கப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் குறித்து அந்த நடிகை தனது கருத்த வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர், நீதிமன்றத்தின் நியதி அனைவருக்கும் சமனானது இல்லை என்றும், தனது கார் ஓட்டுநர் என கூறப்படும் நபர் குறித்தும் விளக்கமாக பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கேலி செய்தவர்களுக்கு இந்த தீர்ப்பை அர்ப்பணிக்கிறேன்.. தாக்குதல் வழக்கு குறித்து நடிகை வெளியிட்ட பதிவு வைரல்!
நடிகை தாக்குதல் வழக்கு
Barath Murugan
Barath Murugan | Published: 14 Dec 2025 17:59 PM IST

நடிகை தாக்குதல் வழக்கு (Actress assault case) மலையாள சினிமா (Malayalam Cinema) வட்டாரங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாகும். இந்த வழக்கானது எட்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, கடந்த கடந்த டிசம்பர் 12, 2025 வெள்ளிக்கிழமை இறுதியாக எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது. நீதிபதி ஹனி எம். வர்கீஸ் தலைமையிலான ஒற்றை பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த குற்ற வழக்கில் மொத்தம் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, ஆறு பேருக்கும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஏழு முதல் பத்து வரையிலானவர்களை நீதிமன்றம் விடுவித்தது. தற்போது, இந்த வழக்கில் ​இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் குறித்து அந்த நடிகை தனது அதிருப்தியை வெளிப்படுத்த முன்வந்துள்ளார்.

தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில்,  அந்த தீர்ப்பால் தான் ஆச்சரியப்படவில்லை என்றும், நீதிமன்றத்தின் மீது ஏற்கனவே நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அந்த நடிகை பதிவில் தெரிவித்த விஷயம் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: AK64 கார் ரேஸ் படமா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!

குற்றம் குறித்து நடிகை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

அந்த பதிவில் நடிகை தெரிவித்த விஷயம் :

எட்டு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், 23 நாட்கள். இந்த வேதனையான பயணத்தின் முடிவில் ஒரு ஒளிக்கீற்றை நான் காண்கிறேன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்! எனது வலியை பொய் என்றும், இந்த வழக்கை ஜோடிக்கப்பட்ட கதை என்றும் கேலி செய்தவர்களுக்கு இந்த தீர்ப்பை அர்ப்பணிக்கிறேன். இப்போது உங்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அதேபோல், முதல் குற்றவாளி என்னுடைய தனிப்பட்ட ஓட்டுநர் என்று இன்னும் சொல்பவர்களுக்கு, அது முற்றிலும் பொய். அவர் என்னுடைய ஓட்டுநர் அல்ல, என்னுடைய ஊழியர் அல்ல, எனக்குத் தெரிந்த யாரும் அல்ல, அவர் 2016 இல் நான் பணியாற்றிய ஒரு படத்திற்காக தயாரிப்பாளரால் நியமிக்கப்பட்ட ஒருவர். இந்தக் குற்றம் நடப்பதற்கு முன்பு நான் அவரை ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். எனவே தயவுசெய்து உங்கள் ரசனைக்கு ஏற்ப கதைகளைச் சொல்வதை நிறுத்துங்கள். இந்தத் தீர்ப்பு பலரை ஏமாற்றியிருக்கலாம், ஆனால் எனக்கு ஆச்சரியமில்லை.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் வெளிநாடு ப்ரீ-புக்கிங் நிறுத்தம்.. ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?

2020 ஆம் ஆண்டின் இறுதியில் சில நியாயமற்ற நடவடிக்கைகள் நடந்ததை நான் அறிந்திருந்தேன். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்காக, அதுவரை வழக்கு கையாளப்பட்ட விதம் மாறுகிறது என்பதை அரசு தரப்பும் புரிந்துகொண்டது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த நீதிமன்றத்தின் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று கூறி நான் பலமுறை உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகியுள்ளேன். ஆனால் இந்த வழக்கை இந்த நீதிபதியிடமிருந்து மாற்ற வேண்டும் என்ற எனது மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதன் இறுதியில் விவரங்களைச் சேர்க்கிறேன் என்று அந்த பதிவில் நடிகை தெளிவாக கூறியுள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.